பக்கம்:கேட்கவில்லை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ.வி.பி . ஆசை த்தம்பி மாலை டிபன் சாப்பிடும் போது முருகேசர், மனோரமா. சொக்கநாதர் ஆகியோர் சர்வசாதாரணமாகப் பழக ஆரம் பித்து விட்டனர். இரவு சாப்பாட்டின்போது மனோரமா மட்டும் சொக்கநாதர்கூட இருந்தாள். இருவரும் ஒரு வரை ஒருவர் பார்த்தனர். மனோரமா வெட்கத்தால் குனிந் தாள். "உன்னை மணக்க என் தந்தை சொல்லியிருந்தால் உடனே ஒப்புக்கொண்டிருப்பேன்; ஓடி வந்திருக்கமாட் டேன்" என்றார் சொக்கநாதர். பால் சாப்பிடச் சொன்னாள் மனோரமா முதலில் நீ சாப்பிட்டால்தான் நான் சாப்பிடுவேன் என்றார் சொக்க நாதர். குனிந்த தலை நிமிராமல் பொற்சிலைபோல் நின்றாள் மனோரமா. அடுத்த நிமிடம் அவள் உதட்டிலே பாலை ஊட்டினார் சொக்கநாதர். உன்னையே என் மனைவியாக்கிக் கொள்கிறேன் என்று உறுதி கூறினார் சொக்கநாதர். இவ்வளவு நடந்தது முருகேசருக்குத் தெரியாது.ஆனால் மனோரமாவைச் சொக்கநாதருக்குப் பிடிக்கவேண்டும் என்று தெய்வத்தைப் பிரார்த்தித்தார்; இன்பக் கனவு கண்டார். B மறுநாள் காலை, மனோரமா. "அப்பா! அப்பா!" என்று அலறிக்கொண்டு ஓடிவந்தாள். சொக்கநாதரை அறை யில் காணவில்லை, என் நகைகளைக் காணவில்லை" என்று கூறினாள். முருகேசர் திடுக்கிட்டார். இரும்புப் பெட்டியைப் பார்த்தார். காரில் வந்தோர் கொடுத்த ஆயிரம் ரூபாய் தவிர, இதர ரூபாய் ஒன்றுமே இல்லை. . 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/29&oldid=1735766" இலிருந்து மீள்விக்கப்பட்டது