இல்லை! இந்தச்சட்டத்தை நிறைவேற்ற விடலாமா? இது நிறை வேறினால் காதலின் கதி? என் அத்தைமகள் அமுதாவின் கதி? அமுதாவை நான் அடையவேண்டுமானால் இந்தச் சட்டம் நிறைவேறக்கூடாது. அதனால்தான் சட்டசபையிலே முழங்கினேன். ஆனால் .......... என்னை ஆதரிக்க சட்டசபையில் ஆட்களே இல்லை. என் பேச்சை ஒருவரும் மதிக்கவில்லை. சட்டமும் நிறை வேறாமல் இருக்கவில்லை. இனி என்ன செய்வது? அன்பே அமுதா: நாடு கெட்டுவிட்டது. காதலுக்கு கல்லறை கட்டப் பட்டு விட்டது. இனி நம் காதல் கை கூடப்போவதில்லை. நம் இருவரின் காதலும் ஈடு இணையற்றது என்று வேறு யாருக்குத் தெரியப்போகிறது? சென்னை கடற் கரையைக் கேட்டால் அது சொல்லும்; சென்னையில் நாம் சந்திக்கும்போதெல்லாம். மெரீனா பீச் மணற்பரப்பிலே இரவு எட்டு மணி வரைக்கும், கரையும் கடலும் மோதுவதுபோல் இன்பப் பேச்சால், சிரிப்பால் இணைந்து, தினமும் பிரிவோம் இந்தக் காதல் இல்லை என்று போவதா? அமுதா, இது அக்கிரமம்! ஆண்டவன் என்ன அவன் அப்பனுக்கும் அடுக்காத அக்கிரமம்! சொந்த ஜாதியில் எந்த பெண்ணையும் மணக்கக்கூடாதாம்! 31
பக்கம்:கேட்கவில்லை.pdf/32
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை