ஏ. வி. பி. ஆசைத்தல்பி. இது கொடுமையிலும் கொடுமை! அத்தை மகளைக் கட்டும் உரிமைகூட இல்லாமல் போவதா? கழுதையாகப் பிறந்தாலும் கால்மாகாணி யோகத்தோடு பிறக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் காதல் இருக்கிறதே, அது ஓர் 'கண்றாவி' பிறவி! இந்தக் காதல். உலகத்தில் எந்த நேரத்தில் பிறந்ததோ? காதலுக்கு இருக் கிற எதிர்ப்புக் கொஞ்சமா? ஆண் பெண் உள்ளங்களிலே காதல் சுலபமாக நுழைந் துவிடுகிறது. ஆனால் வெளியே வர காதலால் முடிவதே இல்லை. பொறிக்குள்ளே புகுந்துவிட்ட எலி திரும்ப முடி யுமா? தப்ப முடியுமா? அதைப்போலத்தான் உள்ளிம் என்ற பொறிக்குள் சிக்கிய காதல், உயிரோடு தப்பமுடிவதில்லை- காதலை யார் ஏற்றுக் கொள்கிறார்கள்? ஆணும் பெண்ணும் காதலித்தால், பெற்றோர் எதிர்ப்பு சமூக எதிர்ப்பு. ஊரார் எதிர்ப்பு! இந்த நிலையில் காதல் எப்படி வாழ முடியும்? சாதலைத்தவிர வேறு வழியே இல்லை. ஆனால், அமுதா! நமக்கு இந்த எதிர்ப்புகளெல்லாம் இல்லை. கண்ணகியின் தந்தையும் கோவலன் தந்தையும் பேசி முடித்துக கொண்டதைப் போல, நீ எனக்கு, நான் உனக்கு என்று நம் பெற்றோர்கள் முன்பே உறுதி செய்து கொண்டார்கள். ஆனால் நீயும் நானும் தான் கல்யாணம் பற்றிப்பேசவே இல்லை! அதனால் பாதகம் இல்லை. உன படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்று உன் தந்தை கூறி விட்டார். ஆனால் சொந்த ஜாதியில் கல்யாணம் 32
பக்கம்:கேட்கவில்லை.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை