பக்கம்:கேட்கவில்லை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்லை ! யாராய் இருந்தாலும் ஒன்று கலப்புமணம் செய்யவேண்டும் அல்லது காலமெல்லாம் கல்யாணம் ஆகாமல் இருக் கவேண்டும். எல்லோரும் முதல் முடிவுக்குத்தான் வருவார் களே தவிர. இரண்டாவது முடிவை மனதால்கூட எண்ணிப் பார்க்க மாட்டார்கள். இதனால் கலப்பு மணம் பெருகி ஜாதிகள் தானாகவே ஒழியும். இப்படிப்பட்ட சட்டத்தை நீங்கள் எதிர்க்கலாமா? இந்தச் சட்டத்தால் தனிப்பட்டவர்களின் காதலுக்கு சங்கடம் ஏற்படலாம்! தனி நபரின் நலத்திற்காக பொது நலம் பாழாகுவதா? உங்கள் 'காதல் மாளிகை' காங்கிரீட்டில் கட்டப்பட் டிருக்கலாம்: நீங்கள் அதில் கனகுஷியோடு வாழ்ந்துவர லாம்! அனால் காலரா முற்றுகையிடும் போது. ஊரை காலி பண்ணும் அவசியம் ஏற்பட்டால், மாளிகையைவிட்டு வெளியேற மறுக்க முடியுமா? மறுத்தால் மாளிகையே மயானமாகிவிடும்! அந்த நிலை வரவேண்டுமா? காதல் காதல் என்று கதைக்காதீர்கள்! போன வருடம் என் கூடப் படித்த அரங்கநாயகி ஒரு பிராமணப்பெண். கபூர் என்ற இஸ்லாமியரைக் காதலித்தாள். சமூகம் அனுமதிக்காததால் எவருமறியாதபடி ஏரோப்ளேன் ஏறி கல்யாணம் செய்து கொண்டாள். கலப்புமணச் சட்டம் அமுலில் இருந்தால் இந்த கஷ்டம் ஏன்? ஆரியராவது திராவிடராவது- எல்லாம் கலந்து விட் டது ஆரியரும் இல்லை திராவிடரும் இல்லை" என்று கம் யூனிஸ்ட் காந்தா நேற்றுவரை கண்டபடி பேசினாள். 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/36&oldid=1735775" இலிருந்து மீள்விக்கப்பட்டது