பக்கம்:கேட்கவில்லை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ . வி . பி . ஆசைத்தம்பி எங்களோடு படிக்கின்ற பிராமணப்பெண்ணான ராஜம் வைத்தியக் கல்லூரி மாணவரான கந்தன் என்ற ஆதித் திராவிடரை காதலித்தாள். கந்தனை ராஜம் நேர் வழியில் மணக்கவே முடியவில்லை. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கொல்லைப்புறவழி யாக வந்து மந்திரி யானதைப்போல, ராஜமும் அக்கிரகாரத் தின் கொல்லைப்புறமாக வந்துதான் கந்தனை கணவனாக அடைந்தாள். இதைக் கண்டவுடன் கம்யூனிஸ்ட் காந்தா 'கப்சுப்' என்று இருக்கிறாள். ஆரிய திராவிட பேதம் இருப்பதை எங்களிடம் ஒப்புக்கொண்டாள். இந்த ஆரிய திராவிட பிரச்சனை ஒழிய வேண்டும் என்றால் கட்டாயக் கலப்பு மணச்சட்டம் அவசியம் தேவை. ஏதோ என் காதலை நம்பி இந்தச் சட்டத்தை எதிர்த்து மோசம் போகாதீர்கள். சட்டக் கல்லுரியில் படிக்கும் வேறு ஜாதி ஆறுமுகத்தை, கலப்பு மணச்சட்டம் அமுலுக்கு வரும் தை முதல் நாளில் நான் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன். நீங்கள் வரவேண்டும் என்பது இல்லை. எட்டாம் நம்பர் தந்தி மட்டும் கொடுத்தால் போதும் ஆயாசப்படாதீர் கள் அத்தான். இப்படிக்கு, மாஜி அமுதா, தற்போது மிஸஸ் ஆறுமுகம். 200 ஆறுமுகம்! ஆறுமுகம்!!" என்று அலறிக்கொண்டே எழுந்தேன். 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/37&oldid=1735776" இலிருந்து மீள்விக்கப்பட்டது