பதிப்புரை. இது ஒரு சம்பிரதாயமுறை. ஆசிரியருக்கும் அச்சகத்தாருக்கும். முன்னுரை, சிறப்புரை அளித்த அறிஞர்களுக்குமாகச் சேர்த்து நன்றி செலுத்த ஏற்படும் ஒரு வாய்ப்பு. ஆனால் சம்பிரதாய முறைப் படி நான் இங்கே ஆசிரியரைப்பற்றி மிகைப் படுத்தப் போவதில்லை. காரணம் திரு. அண்ணார் ஆசைத்தம்பி அவர்களை தமிழகத்தில் அறியாத வர்களோ அவரது எழுத்தோவியங்களை படிக்காதவர் களோ இல்லை எனலாம். எனவே அவரைப்பற்றி கூறுவது சர்க்கரை இனிக்கும் என்று சொல்வது போலாகும் இதனை அண்ணார் ஆசைத்தம்பி அவர்களின் “கேட்கவில்லை 'ஒரே இரவு" "இல்லை" "அவன்" "சிறைச்சாலை" முதலிய சிறு கதைகள் இதனுள் அடக்கம். முன்னர் புத்தகமாக வெளியிட்ட முரசொலிப்பதிப்பக உரிமையாளர் நண்பர் திரு. நா. கிருஷ்ணன் அவர்களிடம் வெளியிடும் உரிமையைக் கேட்டேன். தந்தார் மனமுவந்து. திரு. அண்ணார் ஆசைத்தம்பி ஆவர்களின் கருத்தோவியங்களை வெளியிடும் பேறு பெற்றதற்காக ஆசிரியர் அவர்களுக்கும், வெளியிட வாய்ப்பளித்த நண்பர் திரு. நா, கிருஷ்ணன் அவர்களுக்கும் எனது உள்ங்கனிந்த நன்றி. கோவை. 0 வணக்கம், சி. கே. ஆறுமுகம்.
பக்கம்:கேட்கவில்லை.pdf/4
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை