சிறைச்சாலை குற்றம் என்பது என்ன ? ஒரு குறிப்பிட்ட சட்டங் களுக்கு மாறாக செய்யப்படும் காரியங்கள் எதுவாக இருந் தாலும் அது குற்றந்தான். “சட்டம் என்பது ஓர் அரசியல் முறை: சட்டந்தான் அரசியல்" என்று லெனின் கூறியிருக்கிறார். இதன்படி பார்த்தால் அரசியல் ஆதிக்கம் யார் கையில் இருக்கிறதோ அந்த ஒரு சிலரான அவர்கள்தான் சட்டத்தை வகுப்பார்கள். அந்தச்சட்டம் அதை வகுத்த ஒரு சிலரின் நலனுக்கு ஏற்ற முறையில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கும். இந்த நிலையில் அந்தச் சட்டத்தை வகுக்காத-கோடிக் கணக்கான மக்கள், அதற்குக் கட்டுப்பட்டு நடக்க முடியுமா? சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதானே என்று சட்டத்தை உண்டாக்கியோர் சமத்துவம் பேசுவர். ஆனால்.... பணக்காரன்- நடுத்தரவாதி- பாட்டாளி என்ற முப் பிரிவினர் உள்ள சமுதாய அமைப்பில் 'திருடுவது குற்றம்' என்ற சட்டம் மூவருக்கும் பொதுவானதுதான். யார் திருடினாலும் தண்டனை தரப்படும் என்பதும் உண்மைதான். ஆனால் திருடவேண்டிய அவசியம் பணக்காரனுக்கு வருமா? நடுத்தரவாதிக்கு வருமா ? பாட்டாளி ஒருவன்தான் திருட வேண்டிய அவசியத்திற்கு வருவான். இந்தக் குற்றத்திற்கு பாட்டாளி பொறுப்பாளியாக முடியுமா?" 43
பக்கம்:கேட்கவில்லை.pdf/44
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை