சிறைச்சாலை ஆனால் -வெள்ளைக்காரன் காலத்து இந்திய சிறைகளை யும். காங்கிரஸ் காலத்து சிறைகளையும் கர்னல் வெட்ஜ்வுட் ஒப்பிட்டிருந்தால்... இந்திய சிறைகள் காட்டுமிராண்டிகளின் குகை என்பதை கூசாது கூறியிருந்திருப்பார். 1941ம் வருடம் வெள்ளையன் காலத்திய எரவாடா சிறையில் சர்தார் படேல், பி. ஜி. கேர். புலாபாய் தேசாய். கே. எம். முன்சி ஆகியோர் இருந்தனர். இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகைகளைக் கவனித்தால்...காங்கிரஸ் தியாகிகள் சிறையில் இருந்தார்களா, அல்லது அரண்மனை யில் இருந்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு அறையில், வெண்ணெய், நெய், பால், தயிர் ஆகிய வைகளை நிறைத்துவைத்திருப்பாராம் சர்தார் பட்டேல். நினைத்த நேரத்திலே டீ போட்டு சாப்பிடவும். இஷ்டப்பட்ட பலகார பக்ஷணம் சாப்பாடு தயாரிக்கவும் செய்வார்களாம். இந்த உண்மையை 'படேலுடன் ஒருநாள்' என்ற திரு. கே. எம். முன்சியின் கட்டுரையில் இருந்து அறியலாம். அகாகான் அரண்மனையில்தான் மகாத்மா காந்தி சிறை செய்விக்கப் வைக்கப்பட்டு, சகல சௌகரியங்களும் பட்டிருந்தார். பண்டிதநேரு சிறையில் இருக்கும்போது, தன் மகளுக்கு உலக வரலாற்றையே எழுதும் அளவுக்கு வசதிசெய்து கொடுக்கப் பட்டிருந்தார். 51
பக்கம்:கேட்கவில்லை.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை