ஏ.வி.பி .ஆசைத்தம்பி போட்டிக்கூச்சல் போட்டுவந்த காங்கிரஸ்காரர்களை தடியால் அடித்து விரட்டினர். இருக்கிற இடம் தெரியாமல் காங் கிரஸ்காரர்கள் மறைந்தனர். நான் உள்பட பதினோரு பேர்களை போலீசார் கைது செய்து. பஸ்ஸில் ஏற்றிச் சென்றனர். எங்காவது காட்டில் கொண்டு போய் இறக்கிவிடப் போகிறார்களோ என்ற சந் தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில் காங்கிரஸ் அர சாங்கம், சென்னை இந்தி எதிர்ப்பின்போது மறியல் செய்த ஓர் கர்ப்ப ஸ்திரியைக் காரில் ஏற்றி, ஊருக்கு வெளியே பல மைல்களுக்கு அப்பால் இறக்கி விட்டுவிட்டு வந்தனர். அந்த முறை இங்கும் கடைப் பிடிக்கப்படுமோ என்று தேகித்ததில் தவறு என்ன? சது ஆனால் நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சுமார் மதியம் 2-30 மணிக்கு அழைத்து வரப்பட்டோம். எங்களில் பலர் மதியம் சாப்பிடக்கூட இல்லை. - இது தெரிந்தும் போலீஸார் சாப்பாடு போடவுமில்லை. மாலை ஐந்துமணிக்குமேல் எங்களை மாஜிஸ்ட்ரேட் முன் அழைத்துச்சென்றனர். இந்தியை எதிர்க்கும் உரிமை எங் களுக்கு உண்டு என்பதாக வாதாடினோம். நான்கு நாட்கள் தண்டனை தந்து தீர்ப்பளித்தார், மாஜிஸ்ட்ரேட். இரவு சாப்பாட்டை எங்கள் செலவில் வைத்துக்கொள் ளும்படி மாஜிஸ்ட்ரேட் கூறினார். சர்க்கார் விருந்தினராக நாங்கள் சென்றிருக்கும்போது அவ்விதம் செய்வது முறை யாகுமா? சர்க்கார் செலவிலேயே சாப்பாடு போடும்படி மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறினோம். 54
பக்கம்:கேட்கவில்லை.pdf/55
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை