சிறைச்சாலை மாலை ஆறுமணிக்கு இரவு சாப்பாடு ஹோட்டலில் இருந்து எடுத்துவரப்பட்டது. ஜெயில் 'வராண்டா'வில் உட் கார்ந்து எல்லோரும் சாப்பிட்டோம். சாப்பாடு முடிந்ததும் நாங்கள் கட்டியிருந்த அரைஞாண் கயிற்றை அறுத்துவிட உத்திரவிட்டனர். கணவன் இறந்து விட்டால் தாலி அறுக்கப்படுகிறது சமூகத்தில். கைதியாகி விட்டால் அரைஞாண் கயிறு அறுக்கப்படுகிறது சிறையில். கைதியும் விதவையும் ஒரே ரகந்தான். அடைத்துவைக் கப்படுவதிலும், வாழாவெட்டியாக இருப்பதிலும்! விதவையாக்கப்பட்ட பாவைக்கு, பட்டு பீதாம்பரமும் கட்ட உரிமையில்லாதிருப்பதுபோலவே சிறைகளில் கைதிக களுடைய ஆடைகளும் பறிக்கப்பட்டு, வேறு உடைகள் அளிக்கப்படுகின்றன. இரண்டு பேர்கள் இருக்கவேண்டிய சிறை அறையில், நாங்கள் பதினோரு பேர்களும் அடைக்கப்பட்டோம். காங் கிரஸ் ஆட்சியில் உணவு, உடை வேலைபஞ்சம், இருப்பதைப் போல சிறையில் இடப்பஞ்சமும் இருந்தது. என்ன செய்வது? நீள சுடுகாட்டிலாவது காலை நீட்டிப் படுக்க ஆறடி முள்ள அகன்ற இடம் பிணத்திற்குத்தரப்படுகிறது. ஆனால் நாங்கள் இருந்த சப்ஜெயிலில், மனிதனுக்கு நாலடி இடங் கூடத் தரப்படவில்லை. குறுக்கும் நெடுக்குமாக எப்படியோ படுத்தோம். இரவு பூராவும் மூட்டைப் பூச்சிகளோடு போரிட்டோம். 55
பக்கம்:கேட்கவில்லை.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை