பக்கம்:கேட்கவில்லை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ. வி. பி. ஆசைத்தம்பி இதர மாகாணங்களில் 50 கைதிகளை ஒன்றாகச் சேர்த்து விசாலமான அறைக களில் அடைத்து விடுவார்கள். ஆனால் சென்னை சிறைகளில் அதுமாதிரி இல்லாததைப் பார்த்து பெரிதும் ஆச்சரியமடைந்தேன்" 'மற்றொரு சிறையில் ஒர் இருட்டறையில் ஏகாந்தமாக கைதி அடைத்துவைக்கப் பட்டிருந்ததை பார்த்தேன். இது மிகவும் கொடுமையானது” இவ்விதம் பேசியவர் சென்னை கவர்னரும், காங்கிரஸ் காரருமான ஸ்ரீ பிரகாசாதான். இதிலிருந்து பூலோக நரகம் சென்னை மாகாண சிறைகளில்தான் இருக்கிறது என்பதைத் தைரியமாகக் கூறலாம். நான் சிறையில் இருந்தபோது சவரம் செய்துகொள் வதற்காக க்ஷவரத்தொழிலாளியின் உதவியை நாடியதில்லை. ஏனெனில் க்ஷவரக் கத்தியைக்கொண்டு அவன் என்னைத் தீர்த்துக்கட்டி விடுவானோ என்று நான் பயந்து கொண் டிருந்தேன்" என்று ஸ்ரீ பிரகாசா பேசியுள்ளார். ஆனால் - திருச்சி சிறையில் உள்ள கைதிகள் அதற்காக பயப்படவில்லை. பலவந்தமாக கைதிகள் மொட்டையடிக் கப்படுகிறார்கள். அதுவும் க்ஷவரக்கத்தியால் அல்ல: ரேசர் பிளேடுகளின் உதவியால் பெரும்பாலும் மொட்டையடிக்கப் படுகிறதென்றால் ஸ்ரீ பிரகாசா அவர்கள் இக்கொடுமையை எப்படி வர்ணிப்பாரோ? நாங்கள் மூவருமே மறுநாள் பலாத் காசமாக மொட்டையடிக்கப்பட்டோம். 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/59&oldid=1735798" இலிருந்து மீள்விக்கப்பட்டது