கேட்கவில்லை ! போகக்கூடாது என்று பெண்ணுக்குக் கட்டளையிட்டால் ...... புருஷன் ஒப்புக்கொள்வானா? சமூகம் பேசாமலிருக்குமா ? பெண்தான் கேட்பாளா? ஆ ஆண் பெண்ணாக மாறும் விந்தையைப் பத்திரிகை களிலே படித்த ஐயர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். அது எப்படி என் ராஜத்தை ஆணாக மாற்ற முடியுமா. என்றெல்லாம் எழுதிக் கேட்க ஐயர் நினைத்தது உண்டு. ஆனால். எழுதிக் கேட்கவே இல்லை. இந்த விசித்திர விஷப் பரீட்சைக்கு யார்தான் முன்வரு வார்கள் ? பெற்ற தாய் சம்மதிப்பாளா? ஏதோ ஒரு பெண்ணாவது பிறந்ததே என்ற ஆறுதலில் இருந்தார் சாம்ப சிவ ஐயர், ค ராஜத்தை செல்லமாக வளர்த்து வந்தார். தரையில் நடந்தால் பாதம் தேய்ந்துவிடுமென்று ஐயர் கருதினாரோ அல்லது அந்தஸ்தை நினைத்தாரோ தெரியாது. ராஜத்தை கவனிப்பதற்கு மட்டும் அரை டஜன் ஆட்களை நியமித்தார். அம்மா, பசிக்குது, சாப்பாடு வேண்டும், என்று ஒரு நாள்கூட குழந்தை ராஜம் கேட்டதே இல்லை. பழவர்க்கங் களும் பலகார தினுசுகளும், வேளை தவறாமல் சாப்பிடும் குழந்தைக்குத் திணித்துக்கொண்டேயிருந்தால் பசி எடுக்கு மா ? ராஜம்தான் கேட்பாளா? எனக்கு பொம்மை வேண்டும், பட்டாடை வேண்டும் என்று ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைதான் கேட்குமே தவிர, பணக்கார ராஜத்திற்கு கேட்க வேண்டிய அவசிய மென்ன? விளையாட்டுச் சாமான்கள் கடைகளுக்கு வந்து இறங்குமுன், பணக்கார சிறு பிள்ளைகளின் கைகளிலே காட்சியளிக்கும் வாய்ப்பு இருக்கும்போது ராஜம் கேட்பாளா? ராஜத்திற்கு பன்னீர் என்றால் நன்றாகத் தெரியும் . 8
பக்கம்:கேட்கவில்லை.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை