பக்கம்:கேட்பாரில்லை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பும் பாதுகாக்கப்படுமானால்

இந்த விதமான தேவையற்ற அர்த்தமற்ற முட்டாள்தன நம்பிக்கைகள் அன்று போல்-இன்றும் போற்றிவரப்படுமானால் கல்வி கற்றோம் என்று பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது ? தம்மைவிடத் தாழ்ந்தவர்களைப் பார்த்துப் பார்த்து தம் நிலைமை மிகப்பெரிது என்று மகிழத் தூண்டுகிற மனோபாவமும் தம்மைவிட அதிக வசதிகளோடு வாழ்கிறவர்களைக் கண்டால் அவர்கள் அதிர்ஷ்டம் அது. நம்ம அதிர்ஷ்டம் தான் தெரியுதே !


என்று மனம புழுங்குவதும் வாழத் துணை புரிகின்ற பண்புகள் அல்ல.அதிர்ஷ்டத்தில்

நம்பிக்கை வைத்தை கைகட்டிக்கொண்டு அவதிப்படுவதோ உழையாமலே ‘கஞ்சி வரதப்பா .எப்போப்பா? எங்கேயப்பா?


என்று ஏங்கிக் காலாட்டிக் கொண்டு சோம்பல் உபாசனை செய்வதோ உயர்வுக்கு வழிகா காட்டாது.

சமுதாய அமைப்பு முறையிலேயே கோளாறுகள் உள்ளன.

பொருளாதார அடிப்படையிலே சமூக

வாழ்வை மாற்றி அமைத்து விட்டால் போதும். மற்ற எல்லா


நலன்களும் தாமாகவே வத்துவிடும், அறியாமை, மூட நம்பிக்கைகள் எல்லாம் சொல்லாமற் கொள்ளாமல் ஓடிவிடும். வயிற்றுத் தேவைதான் முக்கியம். அதைப் பூர்த்தி செய்துவிட்டால் பிற தேவைகளை யெல்லாம். நிறைவேற்றும் மார்க்கம் தானாகவே வந்துவிடும் என்று சிலர் பேசுகிறார்கள்

. பொருளாதார தகிடுதத்தங்களைப் போற்றி வளர்க்க சில சமுதாய அமைப்பு மாற்றப்பட வேண்டியதே. மாறத் தான் போகிறது அதற்காக இன்று மனிதர்கள் மனுஷத் தினம் இழந்த நிலையிலேயே வாழவேண்டும் என விரும்பு வது சரியல்ல. வரவிருக்கிற விருந்தை எண்ணிக் கொண்டு இப்பொழுது பட்டினி கிடக்கிற நிலையையே தொடர வேண்டும் என்று யாராவது சொல்வார்களானால் அது பேதமையே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/11&oldid=1395181" இலிருந்து மீள்விக்கப்பட்டது