பக்கம்:கேட்பாரில்லை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 :

மேலும், மனிதன் சோற்றுத் தேவைகளுடன் திருப்தி யடைந்து விடுகிற பிராணியல்ல. வயிற்றுத் தேவைதான் முதன்மையானது பசியையும் பொருள் தேவைகளையும் சமாளிக்கும் நிலைமையை ஏற்படுத்தி விட்டால், போதும் ; மற்றவை யெல்லாம் தாமாகவே பூர்த்தியாகி விடும் என்கிற 'மெட்டீரியலிலம் மனித குணங்களைக் காண மறுக்கிறது. தன் பக்தர்களின் பார்வைக்குத் திசைபோட்டே வரு கிறது. லோகாயதவாதிகள் தாங்கள் அமைத்துக் கொண் டுள்ள வேலிகளைத் தாண்டி வெளியே வர விரும்புவ தில்லை; குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சிந்தனை செய்யவும்

மறுக்கிறார்கள். மனிதனின் தன்மைகளையும் தவறுகளையும் ஆராய மனமிருப்பதில்லை. மனமிருந்தாலும், தங்கள் கொள்கைகளில் உள்ள கொண்டுள்ள தீவிர பற்றுதலினால்

சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறியும், அதே

கோஷங்களை சக்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பங்களிலும் ஆரவாரித்தும் 'வழிகாட்ட”த் துடிக்கிறார்கள்.

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால், அவனது எல்லாத் தேவைகளும் பூர்த்தியாக வேண்டும். அவனது நல்ல பண்புகள் எல்லாம் கெளரவிக்கப்பட வேண்டும். சோ றும் பொருளாதார வசதிகளும் சொர்க்கத்தைக் கொண்டு வந்து விடும் என்று நம்பச் சொல்வது ஏமாற்றும் கலையே யாகும். சிந்தனை சுதந்திரமும், உண்மைகளை ஆராய்ந்து சொல்லும் உரிமையும், தனது கருத்துக்களை எடுத்துச் சொல்ல சந்தர்ப்பங்களும் ஒவ்வொருவனுக்கும்

இருக்க வேண்டும். இவற்றை ஒடுக்குகிற, தடைப் படுத்து கிற, வேலிகட்டி தங்கள் வரம்புகளுக்குட்பட்டு நிற்கத் தூண்டுகிற எந்தக் கட்சியும் மனிதகுல நலனுக்கு பரி பூரணமான சேவை செய்வதாகாது. தாங்கள், தான் மனித உயர்வுக்கு உழைக்கிறோம் என்று நாவலிப்பது, எல்லாக் கட்சிகளும் செய்து வருகிற கலை தான்-மக்களை ஏமாற்றி, என்றுமே ஏமாந்தவர்களாக வாழ வழி காட்டு வது தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/12&oldid=1395233" இலிருந்து மீள்விக்கப்பட்டது