பக்கம்:கேட்பாரில்லை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮5

உண்மைகளை உணர்ந்தால், சொல்கிறவர்கள் பேச்சை எல்லாம் உண்மை என நம்பி மதிமயங்காமல், தாங்களும் எண்ணி உணர முடிந்தால். நமக்கென்ன ; கேட்கிறவங்க கேட்பாங்க என்று தட்டிக்கழிக்க முயலாமலிருந்தால்.

பலரை வதை செய்து, சுரண்டி, மனிதத்தனத்தைக் காவு கொடுத்துத் தாம் வாழமுயன்றவர்களை யாரும் கேட் டதில்லை. இது வரை. இப்பொழுதும் கேட்பாரில்லை ; இனியும் யாரும் கேட்கப் போவதில்லை-மக்கள் அனை வரும் தங்கள் சக்தியை உணராமல் போனால் தங்கள் திறன் உணர்ந்து தம் உரிமைகளை வலியுறுத்தாமல் போனால்,

பிறப்பு, அந்தஸ்து. பொருள்பலம் என்று போலிக் காரணங்கள் காட்டி மனிதப் பண்பை மதியாதவர்கள் மானுஷிகத்தை கெளரவிக்க விரும்பாதவர்கள் - உயர்நிலேயிலே வாழ முடிகிறவரை, சந்தர்ப்பங்களை யெல் லாம் தாங்களே பயன்படுத்திக்கொண்டு, சுயநலக்கோட் டையை அரண் செய்து வரும்வரை, சுரண்டலும் பஞ்சமும் பசி பட்டினியும் ஏழ்மையும் வறட்சியும் இவற்றின்

தாயாதிகளும் தான் வீட்டிலும் நாட்டிலும் கூத்திடும்.

கண்துடைப்புகளாக பெரிய மனிதர்களும் செல்வர் களும் தானதர்மங்கள், பொது ஜனகிதிகள், அது இது என்று விளம்பரப்படுத்தி மேலும் மேலும் தங்களுக்குப் புகழ் தேடிக்கொள்வார்கள். அதை ஆதரிப்பதனால் எவ் விதமான பயனும் கிடையாது. தலைமைப் பீடங்கள் எல் லாம் பதவிமோகம், அதிகாரம் செய்யும் மோகம், பண மோகம் முதலியவற்றின் அஸ்திவாரத்திலே அமைக்கப் பட்டவைதான் என்பதை காலம் அவ்வப்போது நமக்கு

உணர்த்தி வருகிறது.

காலம் உணர்த்திய பிறகு தான் மக்களில் பெரும் பலரால் உணரமுடிகிறதே தவிர, உரிய காலத்தில் உள் ளது உணர்ந்த சரியான சமயத்தில் தட்டிக் கேட்க முடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/16&oldid=1395225" இலிருந்து மீள்விக்கப்பட்டது