பக்கம்:கேட்பாரில்லை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனுக்கு இன்றியமையாத உணவு தாராளமாகக்கிடைக்கவில்லை .உடுத்த உடைகள் மலிவாகக் கிட்டவழியில்லை.தங்க வசதியான இடமில்லை. சத்து இல்லாத ஆகாரத்தை தின்று எப்படியோ உடலில் உயிர் உறையும்படி செய்து வருகிற மக்களுக்கு உபவாச மகிமையும் ,குறைவாகச் சாப்பிடுவதால் உண்டாக்கிய நன்மைகளும் போதிக்கப்படுகின்றன நாட்டிலே.உடையில்லை கிழிந்த கந்தல்களையும் அழுக்குத் துணிகளையும் சுமந்து திரிகிறார்கள் எத்தனையோ பேர்.

இல்லாமல் கால், அரை, முக்கால் நிர்வாணக்

கட்டைகளாக அலைவோர் எவ்வளவோ பேர். அதே

வேளையிலே, ஜவுளிகள் பேல் பேலாக தேங்கிவிட்டன.

-அமெரிக்காவில் முதலாளிகள் செய்வது போல் இவற்றை யெல்லாம் அழித்து விடவா ? அதற்கு முன் ஆலைகளை இழுத்து மூடுவோம்; ஆயிரமாயிரம் உழைப்பாளிகளையும். : குடும்பங்களையும் தெருத்திகம்பார்களாக மாற்று வோம் என்ற தீர்மானங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. -இந்த நாட்டிலே. ペー

பணமில்லை, பணமில்லை' ஏழையும் பஞ்சப்பாட்டு பாடுகிறான். பத்து, பன்னிரண்டு மணி நேரம்-அதற்கு அதிகமாகவும் கூட-உழைத்து உடல் ஓய்கிற மத்தியதர வகுப்பினரும் இதே பாட்டுத்தான் பாடுகிறார்கள். சர்க் காரும் இதையே தான் சொல்கிறது.

சர்க்காரின் பணமில்லை என்கிற பேச்சு நாட்டு மக்கள் மீது வரி, மேலும் புதிய வரி என்று வரி வரிகளாகப் படிகிறது.

படிப்பு இல்லை. படிக்க நோமில்லை. நாட்டிலே படித்து அறிவு பெற்றவர்கள் மிக மிகக் குறைவு. மக்களுக்கு கல்வியறிவு புகட்டவேண்டும். இந்தப் பேச்சு ஆர்வமாகப் பிரசாரம் செய்யப்படுகிற காலத்திலேயே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/5&oldid=1395159" இலிருந்து மீள்விக்கப்பட்டது