பக்கம்:கேட்பாரில்லை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

படித்து பள்ளிக்கூடம் விட்டு வந்தவர்களுக்கு

வேலை இல்லை.-பொதுவாக, நாட்டில் எவ்வளவோ பேருக்கு வேலையில்லை.

என்ற நிலைமை எதிர்ப்படுகிறது. படித்தவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திண்டாடுகிறார்கள்.குமாஸ்தா வேலை -என்ன எழவு வேலையாவது -தேவை என்று தேடி அலைகிறார்கள். மனுச் செய்கிறார்கள் - வாழ்விலே விரக்தி கொள்கிறார்கள்.அலர்களுக்கு வாழ வழி காட்டுவாரில்லை. பிரசங்கிகள் இருக்கிறார்கள். தலைவர்கள் இருக்கிறார்கள்.ஆசிரியர்கள்,அறிஞர்கள்,ஆள்வோர்கள், உயர்ந்தவர்கள்,உத்தமர்கள்,தியாகிகள், பூஜ்ஜியர்கள், கூழிகள்,ஆனந்தர்கள், எத்தனை எத்தனையோ பெயர்கள் சொல்லிப் பெருமையாகப் பேசி 'ஊருக்கு உழைப்பதே யோகம்" 'தேச சேவையே எங்கள் இலட்சியம்' 'பொதுநலப்பணியே எமது நோக்கம் " என்றெல்லாம் கூறி பெருமைபெற நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஏராளமாக

ஆனாலும், மனிதர் மனிதராக வாழவழியில்லை. வாழ்க் கைத்தரம் உயர யாரும் வழிகாட்டவில்லை.

ஏன் இந்நிலை மக்களின் வாழ்வு வரவர வரண்டு போவதேன் ? வாழ்வு உயர வழியே இல்லையா? அன் றாட வாழ்க்கைச் செலவுக்கே லோல் போடுகிற சாதாரண மனிதனின் உள்ளம் வாழ்வது எப்போ வாழ்வது எப்போ? என்று ஏக்கப் பெரு மூச்சு எறிகிறதே, அவனுக்கு விமோசனமே கிடையாதா? மண்ணோடு மண் ணாய்க் கிடந்து உழலும் மனிதரில் பெரும்பாலோனர் உண் வதற்கு வழி தெரியாதா என்று விண்நோக்கிக்

கண்டு பெருமூச்சு எறிகிறார்களே. இவர்களுக்கு உயர்வு கிடையாதா?

தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால், தினந் தோறும் தற்கொலைகளும், கொலை. களவு கொள்ளைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/6&oldid=1395158" இலிருந்து மீள்விக்கப்பட்டது