பக்கம்:கேட்பாரில்லை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S

யுறும் மக்களைப் பாதுகாக்க ஆண்டவன் வந்து உ தவினான் என்பதை மனிதகுலச் சரிதையின் எந்தப் பகுதியும் உறுதி கூறவில்லை இதுவரை,

உயரேயிருந்து உதவிவந்துவிழும் என எதிர்பார்ப்பை விட்டுவிட வேண்டும் மனிதன்.விண்ணகத்திலே காதில்லை கேட்பதற்கு

கையில்லை உதவி புரிவதற்கு என்பதை

இதற்குள்ளாக அவன் உணர்த்திருக்க வேண்டும்.

இறந்தகால அனுபவங்களின் தவிர்க்க முடியாத குழந்தைதான் நிகழ்காலம் . மேலிடம் அருளிய சந்தர்ப்ப சகாயங்கள்

இதுவரை எதிர்ப்பட்டது கிடையாது. ஆகவே இனியும் எவ்வித குறுக்கீடுகளும் ஏற்பட முடியாது. கோளாறுகள் தவிர்க்கப்பட்டிருக்குமானால், மனிதன் தான் அவற்றை ஒழித்திருக்கிறான் அடிமைகளுககு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிற தென்றால், அதைச்

சாதித்தவன் மனிதன் தான், புதிய உண்மைகள் உதயமா யிரூக்கின்றன வெனில், அவற்றைக் கண்டு பிடித்தவன் மனிதனே, ஆடையற்றவர்களுக்கு உடுக்கத்துணி வேண்டுமானால்

பசித்தவர்கள் புசிக்கவேண்டுமானால்; நியாயம் வழங்கப்ப்பட வேண்டுமானால்; உழைப்பு உரிய மதிப்பை பெறவேண்டுமானால் மூட நம்பிக்கை மனமூலையிலிருந்து விரட்டப்பட வேண்டுமானால்; அபலைகள் பாதுகாக்கப்பட வேண்மானால் நேர்மை முடிவிலே நிச்சயவெற்றி பெறுவதானால் - அனைத்தையும் மனிதன் தான் சாதித்தாக வேண்டும். எதிர் காலத்தின் இணையிலா வெற்றிகள் அத் தனையும் மனிதனால்-மனிதனால் மட்டுமே - சாதிக்கப்பட வேண்டியவை தான்.

"தன்னேயே நம்பி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் மனிதன். வேத கீத பாராயணங்கள்’ குளிர்கால கொடுந் தாக்குதல்களிலிருந்து மனிதனைக் காப்பாற்றுவதில்லை. ஆனால் வீடுகள், நெருப்பு, ஆடைகள் முதலிய தான் தகுந்த பாதுகாப்பளிக்கின்றன. பஞ்சத்தை ஆயிரமாயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்பாரில்லை.pdf/9&oldid=1395179" இலிருந்து மீள்விக்கப்பட்டது