பக்கம்:கேரக்டர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமெச்சூர் ஆராவமுதன்

"என்னப்பா, சிட்டிபாபு! எங்கப்பா, கிளம்பிட்டே? உன்னைப் பார்க்கத்தாம்பா வரேன். போன காரியம் ஸக்ஸெஸ் அதாவது வெற்றி!

நாடக ஆசிரியர் நாகபூஷணம் இல்லே. அதாம்பா "காதலா அல்லது சாதலா?”ன்னு ஒரு நாடகம் எழுதினாரே, அவரைப் புடிச்சு ஒரு கதை கேட்டிருக்கேன். கையிலே ஒரு சரித்திர நாடகம் ரெடியாயிருக்காம். க்ளைமாக்ஸ் ஸீன்தான் எழுதணுமாம், அதையும் அடுத்த சனிக்கிழமைக்குள்ளே முடிச்சுத் தந்துடறேன்னுட்டாரு. நல்ல லக்கி சான்ஸுப்பா நமக்கு!

கதையைக்கூடச் சொல்லிட்டாரு. மொத்தம் முப்பத்தாறு ஸீன்தானாம்.வவ்வு, திரில்லு. சண்டை, சஸ்பென்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு! கதையை டிராஜிடியாவும் முடிக்கலாம், இல்லேன்னா காமெடியாவும் மாத்திக்கலாம்.

நாடகத்துக்கு டைடிலே அட்ராக்டிவா இருக்குது. அதாவது பேரே ரொம்ப கவர்ச்சி! என்ன பேர் தெரியுமா? 'திப்பு செய்த தப்பு!'

என்னப்பா சிரிக்கிறே? தலைப்பே தமாஷாயிருக்கேன்னு தானே? அதுமட்டுமில்லை. திப்பு என்ன தப்பு செய்தாங்கறது தான் கதைக்கே சஸ்பென்ஸ்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/120&oldid=1481158" இலிருந்து மீள்விக்கப்பட்டது