பக்கம்:கேரக்டர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

என்று விளம்பரமும் செய்தான்!

கடைசியில் நாடகம் ஒருவிதமாக நடந்து முடிந்தது. அவ்வளவுதான்.

நாடகம் முடிந்ததும் நண்பர்கள் எல்லோரும் நழுவி விட்டார்கள். கடைசியாகத் தியேட்டரில் மிஞ்சியது ஆராவமுதுதான். அவனுக்கு இதில் ஏக நஷ்டம். ஏசுக் கஷ்டம்.


ஓட்டல்காரர், அச்சாபீஸ்காரர் எல்லோருக்கும் ஈடு கொடுத்துவிட்டு இராத்திரி ஒரு மணிக்குமேல் வீடு போய்ச் சேர்ந்தான்.

ஆனால், ஆராவமுது இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. நாடகம் வெற்றி ஆகவில்லையே என்கிற ஒரே குறை தான். மறுநாள் கூட்ஸ் ஷெட்டில் நண்பர்களிடமெல்லாம் இதே பேச்சுத்தான்.

"போப்பா! ஏ.எஸ். டயலாக் சரியாவே பேசல்லேப்பா? 'திப்பு நீ செய்தது தப்பு'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'தப்பு நீ செய்தது ரொம்பத் திப்புன்'னுட்டாம்பா. இதுக்கு பொங்கல், மிளகுவடை, டீ ஒரு கேடு. ஸ்திரீ பார்ட்டும் சரி இல்லே. அய்யங்காருக்கு இடுப்பு ரொம்பப் பெரிசுப்பா! இடும்பியா ஆக்ட் பண்றவனைக் கொண்டுவந்து ஹீரோயினா போட்டா எப்படியிருக்கும்? ப்ராம்ப்டர் வேறே உரக்க உரக்கப் பேசிட்டாரு. அவர் பேசறது ஆடியன்ஸ் காதுலேயே விழுது. நாடகம் முடிஞ்சதும் ஜனங்க என்னா பேசிக்கிட்டுப் போனாங்க தெரியுமா? நாடகத்திலே டெம்போவே இல்லையாம். 'கூட்ஸ் ஷெட் ஆசாமிங்கதானே? டெம்போவும் அப்படித்தானே இருக்கும்'னு சொல்லிக்கிட்டு போனாங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/124&oldid=1481162" இலிருந்து மீள்விக்கப்பட்டது