பக்கம்:கேரக்டர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



128

நடிப்பை நீர் பார்த்ததில்லே! இதென்னய்யா டயலாக் வேண்டியிருக்கு? நடிப்பு இல்லாதவனுக்குத்தானே டயலாக்? நான் வாயைத் திறக்காமலே நடிச்சு பாக்கறவங்க கண்ணிலே தண்ணி வரவழைப்பேன்" என்பார் ஏகாம்பரம்.

இவர் போன பிறகு ஒளரங்கசீப் முருகேசன் நடிப்பு தன்றாக இல்லை என்றும், நடிக்கத் தெரியாமல் டயலாக்கை மட்டும் ஒப்பித்தால் போதுமா என்றும் சொல்லிக்கொண்டு வருவார் வேறொருவர்.

ஏகாம்பரம் அவரைமட்டும் சும்மா விட்டுவிடுவாரா என்ன?

"ஆமாம். இவரு கிழிச்சுப்பிடுவாரு. இந்த அமெச்சூர் நடிகன்களெல்லாம் இந்த ஔரங்கசீப் நடிப்பைப் போய் பார்க்கணும். இன்னைத் தேதிலே அவனை விட்டா நடிக்கறத்துக்கு வேறே ஆள் ஏதய்யா? முகபாவத்திலே யாரு வேணாலும் நடிச்சுடலாம். டயலாக் பேசத் தெரிய வேண்டாமா?" என்று ஒரு போடு போடுவார் ஏகாம்பரம்.

"பார்த்தீரா ஏகாம்பரம், 'ஸம்மிட்' மகாநாட்டு லட்சணத்தை? அமெரிக்காகாரன் ரஷ்யாமீது பறந்து வந்து வேவு பார்த்திருக்கான். பத்து மைல் உயரத்திலே பறந்த அந்த விமானத்தை ரஷ்யாக்காரன் சுட்டுத் தள்ளியிருக்கான்.. பின்னே, சுடாமல் விடுவானோ? குருஷ்சேவ் செய்ததுதான் 'ரைட்'! பொல்லாத ஆளாச்சே. அவன்" என்று வருவார் பரமசிவம்.

"என்னய்யா சொல்றீர்? குருஷ்சேவ் செய்தது ரைட் என்கிறீரா? எப்படிய்யா நியாயம்? இவனுக்கும் சாமர்த்தியம் இருந்தா அமெரிக்காவிலே போய் வேவு பார்க்கட்டுமே?" என்று சொல்லி, குருஷ்சேவுக்குப் பரிந்துகொண்டு வந்த பரமசிவத்தைக் கோபமாகப் பார்ப்பார் ஏகாம்பரம்.

சற்றைக்கெல்லாம் சாம்பசிவம் வருவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/128&oldid=1481166" இலிருந்து மீள்விக்கப்பட்டது