பக்கம்:கேரக்டர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13

அகாமடேஷன் தகராறு; கொஞ்சம் இடம் பிடிச்சுக் கொடுக்க முடியுமா?"ன்னான். 'சரி'ன்னு ஏர்-இண்டியாவுக்கு டெலிபோன் பண்ணினேன். என்குயரி கர்ல் மிஸ் கல்பனா தன்னுடைய ஸ்வீட் வாய்ஸ்லே 'என்ன வேண்டும்?'னா. 'நான்தான் அண்ணாஜி'ன்னேன். அவ்வளவுதான் 'ஹல்லோ!அண்ணாஜியா? உங்க லெதர்பாக் இங்கேயிருக்குது, மறந்து வெச்சுட் டுப் போயிட்டீங்க. வந்து வாங்கிட்டுப் போங்கோ'ன்னா. உடனே காரில் புறப்பட்டுப் போய் அந்தச் சிந்தி கர்ல்கிட்டே பையை வாங்கிண்டேன். என் பிசினஸ்ஸே அதில்தானே இருக்குது?"

"அண்ணாஜி! நீங்க ஒரு 'மொபைல் மல்டிபிளைட் பிஸினஸ் இன்ஸ்டிட்யூஷன்'ன்னு அவ எனக்கு ஓர் அட்சதையைப் போட்டாள். கிறிஸ்மஸ் பிரசண்டுக்குத்தான் அடிபோடறாங்கிறது எனக்குப் புரியாதா? சாக்லெட் டின்னை வாங்கிப் போட்டுட்டு, கண்டிராக்டருக்கும் ஒரு ஸீட் புக் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்!"

அண்ணாஜி இப்படி அளந்துகொண்டே யிருப்பான். திடீரென்று ஏதாவது ஒரு காரில் தொத்திக்கொண்டு போய் விடுவான். மறுபடியும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ கழித்துத்தான் மீண்டும் தென்படுவான்.

அவனுக்கு எப்போதும் ஒரே அவசரந்தான். இறக்கை கட்டிக்கொண்டு பறந்தபடியே இருப்பான். இன்றைக்கு ஓர் இடத்தில் 'ஓபனிங் செரிமனி' என்பான். நாளைக்கு ஓர் இடத்தில் மூடுவிழா என்பான்.

பம்பாய், கல்கத்தா, டில்லி, லண்டன், சௌத் ஆப்பிரிக்கா எல்லா இடங்களிலும் தனக்குப் பிஸினஸ் இருப்பதாகவும், எல்லா இடங்களிலும் எல்லாரையும் தெரியும் என்றும் சொல்வான். எல்லாம் ஒரே ஹம்பக்!

எல்லாருக்கும் புத்தி சொல்வான், எல்லோரும் தன் பேச்சைக் கேட்காமல் கெட்டுப் போனதுபோல அங்கலாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/13&oldid=1478399" இலிருந்து மீள்விக்கப்பட்டது