பக்கம்:கேரக்டர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

"இல்லே, பயணத்தை அடுத்த மாசம் தள்ளிப்போடக் கூடாதான்னு தெரிஞ்சுக்கத்தான்!"

ஏன் அடுத்த மாசம் போறதிலே உனக்கென்ன லாபம்?"

"அடுத்த மாசம் நான் பதினைஞ்சு நாள் லீவு எடுத்துக்கப் போறேன். அந்தச் சமயத்திலே நீங்களும் லீவு எடுத்துக்கலாமேன்னு சொன்னேன். ஆபீசிலே நான் இல்லாட்டா உங்களுக்குக் கை ஓடிஞ்ச மாதிரி இருக்குமே...!"

"இவர் பெரிய இவரு! கூப்பிட்ட குரலுக்கு வந்துடுவாரு பாரு. சரித்தான் போடா!"

"ஏன் சார், இன்னைக்கே போகப் போறீங்களா?"

"ஆமாம்; எதுக்குடா?"

"எனக்குத் தெரிந்த லாரி ஒண்ணு நாளைக்கு ராத்திரி புறப்படுது. தாம்பரம் டேசனாண்டே வந்து நில்லு,சார்! நான் அந்த லாரியிலேயே வந்து உங்களை ஏத்தி விட்டுடறேன். லாரி டிரைவர்கிட்டே அஞ்சு ரூபா கொடுத்தாப் போதும் சார்! ஏதோ குழந்தை குட்டிக்காரராச்சேன்னு சொன்னேன். கேட்டாக் கேளுங்க; விட்டா விடுங்க!"

"போடா, உன் அட்வைஸும் நீயும், அதிகப் பிரசங்கி!"

"ஏன் சார், திருப்பி வரப்போ தஞ்சாவூர் வழியாத்தானே வருவீங்க?"

"எதுக்குடா?"

"தஞ்சாவூர்லே குடமுளகா சீப்பு, சார்! ஒரு மணங்கு புடிச்சிகிட்டு வாங்களேன். மோர் முளகாப் போட்டு வெச்சா ஒரு வருசத்துக்கு ஒதைச்சுக்கிட்டிருக்கும். ஏதோ குழந்தை குட்டிக்காரராச்சேன்னு சொன்னேன்!"

யார் எந்த வேலை சொன்னாலும் ஆறுமுகம் உடனே புறப்பட்டுவிட மாட்டான். 'அது அவசியந்தானா? அவசரந்தானா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/23&oldid=1478768" இலிருந்து மீள்விக்கப்பட்டது