பக்கம்:கேரக்டர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'அல்டாப்' ஆறுமுகம்

அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு விசிலடித்தால், அது அந்த வட்டாரம் முழுவதுமே எதிரொலிக்கும். அந்தச் சீட்டியின் சாயலிலிருந்தே தங்கள் வாத்தியார் தூரத்தில் வந்து கொண்டிருக்கிறார் என்பதை ஆறுமுகத்தின் சகாக்கள் புரிந்து கொண்டு விடுவார்கள்.

டீக்கடை, சலூன், சினிமாக் கொட்டகை, ரிக்ஷா ஸ்டாண்டு—இம்மாதிரி இடங்களில் தான் அவனுடைய சீடர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள். 'சலாம் வாத்தியாரே!' என்று ஆறுமுகத்தை அன்புடன் வரவேற்பார்கள். அவனிடத்தில் அவர்களுக்கு ஒரு தனி மரியாதையும் பக்தியும் உண்டு.

இரவு 'நைட்ஷோ' ஆரம்பித்து ஊர் அடங்குகிற நேரத்தில்தான் ஆறுமுகத்தின் அட்டகாசம் ஆரம்பமாகும்.

"டாய் ... கேட்டுக்கினீங்களாடா, நம்ப வெங்கடேசன் கதையை; பொறுக்கிப் பையன் புத்தியைக் காமிச்சுட்டாண்டா...நேத்து ராத்திரி மணி ஒண்ணு இருக்கும்; நாடார் கட்டைத் தொட்டி இருக்குதுல்லே, அந்தச் சந்துலே வாரன்... கும்முனு இருக்குது இருட்டு! நாயர் கடை இன்னும் மூடியாவல்லே. அங்கே போய் ஒரு பீடியைப் பத்த வச்சுக்கிட்டு ஜைலண்டா நடக்கறேன். தபால் பொட்டி பக்கத்துலே முருங்கமரம் இல்லே, அந்தக் குடிசைக்குள்ளாற யாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/25&oldid=1478821" இலிருந்து மீள்விக்கப்பட்டது