பக்கம்:கேரக்டர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

அந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பலம் வாய்ந்த கை பிச்சுவாவை உயர்த்திக்கொண்டு நிற்கிறது. அந்தக் கையை வேறொரு கை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. கத்தி மேலாக எந்தத் திசையில் நகருகிறதோ, அந்தப் பக்கமே அந்தக் கூட்டமும் சாய்கிறது. அந்தக் கத்திக்குரியவன் வேறு யாருமல்ல; 'அல்டாப்' ஆறுமுகந்தான். வெங்கடேசன் முதுகை அந்தக் கத்தி பதம் பார்த்துவிட்டது. வெங்கடேசன் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டான். ஆறுமுகம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க்கொண்டிருக்கிறான்!

"ரௌடியாயிருந்தா என்ன? அதுக்காவ அக்கிரமம் செய்யலாமா? அதால் கீறிட்டேன். ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லே. டாய்! எவனாச்சும் தப்புத்தண்டா சேஞ்சிங்க, திரும்பி வந்ததும் தீர்த்துப்புடுவேன். ஆமாம், சொல்லிட்டேன். இந்த 'அல்டாப்' நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/29&oldid=1478826" இலிருந்து மீள்விக்கப்பட்டது