பக்கம்:கேரக்டர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'தொழிலாளி' துளசிங்கம்

தொழிலாளர்கள் பிரயாணம் செய்வதற்காகவே ஏற்பட்ட அந்த ரயிலில் தொழிலாளி துளசிங்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் தினமும் உட்காருவான். அந்த இடத்தில் 'ஆடு — புலி' கட்டம் ஒன்று ஆணியால் செதுக்கப்பட்டிருக்கும். துளசிங்கத்தையும் அவன் தோழர்களையும் தவிர வேறு யாரும் அந்த இடத்தில் உட்காரமாட்டார்கள். தொழிலாளர்களுக்குள்ளே அப்படி ஒருகட்டுப்பாடு.

தலை முழுகினாப்போல் எண்ணெய்ப் பசையற்ற கிராப்பு சந்தனப் பொட்டு, பனியன். பனியனுக்கு மேலே ஓபன் கோட். அதற்கு மேல் வெள்ளைக்கோடு போட்ட சிவப்புக் காசிப்பட்டு. யாரையும் எதிர்த்துப் பேசக்கூடிய முரட்டு முகபாவம்! கையிலே ஒரு டிபன்பாக்ஸ். கக்கத்தில் ஒரு குடை!

துளசிங்கம் வந்து ரயில் ஏறவேண்டியதுதான். 'ஆடு-புலி' ஆட்டம் ஆரம்பமாகிவிடும்.

"இன்னா தொள்சிங்கம்! ஏன் கண்ணெல்லாம் ஒரு மாதிரி 'ஜவ ஜவா'ன்னு இருக்குது?"

"தெரியாதா ஒனுக்கு? இந்த ஏழுமலை இல்லே ஏழுமலை? அதாம்பா அந்த ஐனாவரத்து ஆளு... சைக்கிள் சாப்லே இருந்தானே அவன்..."

"ஆமா, இப்ப டாணாக்காரனாயிட்டானே, அவன் தானே?..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/40&oldid=1479094" இலிருந்து மீள்விக்கப்பட்டது