பக்கம்:கேரக்டர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இருக்குது டோய்! எந்தச் சீமானும் இதுவரைக்கும் நம்பளைப் பார்த்துக் கேள்வி கேட்டதில்லே... இவரு என்னாடான்னா?"

அன்று பகல் வேளைச் சாப்பாட்டுக்குப் பிறகு வழக்கமாக நடைபெறும் தொழிலாளர்கள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது.

"சகோதரத் தொழிலாளர்களே! இன்று நமது நாட்டை மேல் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்... ரஷ்யாவைப் பாருங்கள், சைனாவைப் பாருங்கள்...அங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..." என்று தோழர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.

"யோவ்! நிறுத்துய்யா சரிதான்..."—துளசிங்கம் எழுந்து நின்றான்.

"மேல் நாடு, ரஷ்யா, சைனா அதெல்லாம் இருக்கட்டும்யா. அவங்க காருலே போனா நமக்கு இன்னா ஆச்சு? நம் ஊர் விசயம் பேசுய்யா. அரிசி என்னா வெலை விக்குது பார்த்தியா? அதுக்கு ஒரு வழி பண்ணுவியா! சைனாவாம், ரஷ்யாவாம்..."

கூட்டத்தினர் எல்லோரும் துளசிங்கம் கேள்விக்குக் கை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்தார்கள். பிரசங்கி பதில் கூறமுடியாமல் திணறிப்போய் அசந்து உட்கார்ந்து விட்டார்.

"டாய்! துளசியைப் பார்த்துக்கினாயாடா, கேட்டான். பார்த்தியா கேள்வி, சரியான பாயிண்டுப்பா. அரிசிலே மடக்கினான் பாரு! அடுத்த வருஷம் நம்ப சங்கத்துக்கு தொள்சி தாம்பா தலைவரு. கன்னிப்பன் சொசும் இல்லேப்பா..."

"தொள்சிங்கம் வாழ்க!" என்ற கோஷத்துடன் கூட்டம் முடிவடைகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/44&oldid=1479099" இலிருந்து மீள்விக்கப்பட்டது