பக்கம்:கேரக்டர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



68

"மயில்சாமி! ஹேமலதாவோடு நான் எப்படிடா பேசறது. வெட்கமாயிருக்குமே?"

"மண்டு மண்டு! புரொட்யூஸர்னா அவளே வந்து பேசுவாடா!"

மறுநாளே ஏகாம்பரம் தன் பெரியப்பாவிடம் ரூபாய் இரண்டாயிரத்தை வாங்கிக்கொண்டு நண்பனுடன் சென்னைக்குப் புறப்பட்டான். லாரிப் பணத்தை வசூல் செய்து மாம்பலத்தில் ஒரு வீட்டைப் பிடித்து அட்வான்ஸ் கொடுத்து ஏகாம்பரம் பிக்சர்ஸ் என்று போர்டையும் போட்டான். ஏகாம்பரந்தான் டிரொட்யூஸர்! மயில்சாமிதான் புரொடக்ஷன் மானேஜர்! அவ்வளவுதான். மயில்சாமி சொன்ன போதெல்லாம் பணத்தை எடுத்தெடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஏகாம்பரம்.

"ஏகாம்பரம்! இனிமே நீ இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. ஸில்க் ஜிப்பா, கழுத்திலே செயின், கையிலே சிகரெட் டப்பா. இதெல்லாந்தான் புரொட்யூஸருக்கு லட்சணம்."

டேய் டேய் எனக்குச் சிகரெட் மட்டும் வேண்டாம்டா!"

"கண்ட்ரி! அது இல்லாட்டா இந்த பீல்டே உன்னை மதிக்காது."

மறுநாள் காலையில் மயில்சாமியும் ஏகாம்பரமும் பேபி டாக்ஸி ஒன்றை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு ரோஜாப்பூ மாலையை வாங்கிப் போட்டனர். பல இடங்களுக்குப் போய்ச் சுற்றி அலைந்துவிட்டுக் கடைசியாகக் கண்ணம்மாப்பேட்டையை அடைந்தனர்.

மிஸ் ஹேமலதா ஏகாம்பரத்தின் எதிரில் வந்து நின்று வணங்கிவிட்டு மயில்சாமியைப் பார்த்து, "வாங்க அண்ணாச்சி!" என்றாள். அவள் புன்னகையில் மயங்கிய ஏகாம்பரம் ரூபாய் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து அவளை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துகொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/68&oldid=1479451" இலிருந்து மீள்விக்கப்பட்டது