பக்கம்:கேரக்டர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'பல்டி' பலராமன்

"ஹல்லோ, சந்தர்! நான் யார் தெரிகிறதாடா?... என்னடா முழிக்கிறே? இடியட்! என்னைத் தெரியலையா உனக்கு? நான் தாண்டா பலராம்!"-என் தோளைப் பிடித்து உலுக்கிக்கொண்டே ஏகவசனத்தில் தொடங்கிவிட்டான் அவன். என்பாடு சங்கடமாய்ப் போய்விட்டது.

என்னுடைய மனைவியுடன் அப்போதுதான் சினிமாவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். புறப்படும்போதே இப்படி ஒரு அபசகுணம்! அவனிடமிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவன் மேலும் ஆரம்பித்து விட்டான்.

"ஏண்டா, பழைய பிரண்டை இப்படியா மறந்துடறது? இது யாருடா? ஒய்பா? வெரிகுட்!.. பலே ஆள்டா நீ; எப்படா கல்யாணம் ஆச்சு? ஏண்டா எனக்கு இன்விடேஷனே அனுப்பல்லே?"

"இரண்டு மாசம் ஆச்சு, உன் அட்ரஸ்ஸே தெரியல்லே! அதனாலே அனுப்பல்லே..." என்று இழுத்தேன்.

"என்னடா என் அட்ரஸ் தெரியல்லேங்கறே? எல்.ஐ.சி. கட்டடத்திலேதானேடா இருக்கேன்! டாப் ப்ளோர்டா! நான் இப்ப ஓர் இன்ஷுரன்ஸ் ஏஜண்டு. போறது; கலியாணத்தைத்தான் ரகசியமா முடிச்சுட்டே; ஒருபதினாயிரம் ரூபாய்க்கு இன்ஷூராவது செய்துகொள்ளேன்" என்று அடி போட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/90&oldid=1479782" இலிருந்து மீள்விக்கப்பட்டது