பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


ஆகவே, எக்காரணத்தை முன்னிட்டும், இடையிலே. எழுத்து நிற்பதோ, உட்கார்த்திருக்கும் நாற்காலியை நகர்த்திக் கொள்வதோ, நாற்காலியில் எழுந்து எழுந்து உட்கார்ந்து ஆடுவதோ கூடாது. அது ஆட்ட விதிமுறைக்கு, முற்றிலும் மாறுபட்டதாகும். தவறாகும்.

எதிரே இருக்கும் ஆடும் பலகையைத் தாங்கும் மேசையின் கீழே உள்ள கட்டைகளில், கால்களை வைத்துக் கொண்டிருப்பதும், ஆடும் பலகை மேலே பிறர் ஆடும்போது கைகளை ஊன்றியும், தன் ஆடை படுவது போலவும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல.

தான் ஆடும்போது, ஆடப்பயன்படும் கையை தவிர மறு கையை ஆடும் பலகையின் மீது வைத்திருக்கக்கூடாது.

ஆடும்பொழுது, ஆடும் பலகையின் மேல் கையை வைத்திருப்பதுதான் முறை. மற்ற நேரங்களில், ஆடும் பலகையையோ, அதன் தாங்கியையோ, மற்ற எந்த விதமான பொருட்களையோ தொடவே கூடாது.

அதேபோல், தன் எல்லையைக் குறிப்பதுபோல் ஆடும் பலகையின் மத்தியிலிருந்து இருபுறமும் அம்புக் குறிபோல இட்டிருக்கும் அடையாளத்திலிருந்து நீட்டி விட்டக்கற்பனைக் கோட்டைக் கடந்து, கால்களையோ, கைகளையோ கொண்டு செல்லக்கூடாது.

ஆனால், ஆடப் பயன்படும் விரலையும். அதனைச் சார்ந்த விரல்களையும் அம்புக்குறிக்கு அப்புறம் கொண்டு சென்றாலும்