பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாடத்
தொடங்கும் முறை


உட்கார்ந்து ஆடும் முறைகளை உணர்ந்து கொண்ட பிறகு, ஆட்டத்தைத் தொடங்கிவிடுவது தான் நல்லது. ஆனால், யார் முதலில் ஆட்டத்தைத் தொடங்குவது என்பதை நிர்ணயிக்கவும், ஆடும் நிலையை உணர்த்தவும் இரு விதங்களில் நடுவர்கள் தீர்மானிப்பார்கள்.

யார் முதலில் காய்களை அடிக்கவேண்டும் அல்லது தனக்கு விருப்பமான இடத்தில் உட்காரும் நிலையைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்பதை நாணயம் சுண்டியெறிவதின் மூலம் தெரிவு செய்யலாம். (Toss)

அல்லது, நடுவராகப் பணியாற்றுபவர், ஒரு கையில் வெள்ளைக் காயையும், மற்றொரு கையில் கறுப்புக்காயையும் மறைவான ஒரு இடத்தில் கைமாற்றி வைத்துக் கொண்டு