பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


முடியவாறே, ஆடவிருக்கும் இருவரில் ஒருவரை அழைத்து எந்தக் கையில் வெள்ளைக்காய் அல்லது கறுப்புக்காய் என்ற ஒன்று இருக்கிறது என்பதனைக் கூறச் செய்ய வேண்டும்.

அந்தக் கையில் அவர் கூறிய நிறக்காய் சரியாக இருந்தால், அவர் தேர்ந்தெடுக்கும் உரிமையில் வெற்றி பெற்றவராகிறார்.

இத்தகைய உரிமை பெற்ற ஒருவர், உட்காருகின்ற இடம் அல்லது முதலில் அடித்தாடும் வாய்ப்பு என்ற இரண்டில் ஒன்றைத் தான் விரும்பியவாறு தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.

ஒற்றையர் (Singles) ஆட்டமாக இருந்தால் இருவரும் எதிரெதிரே உட்கார்ந்துகொண்டு ஆட வேண்டும்.

இரட்டையர் (Doubles) ஆட்டமாக இருந்தால், நாணயம் சுண்டுவதில் அல்லது சரியான காய் தெரிந்தெடுப்பதில் கேட்டு வெற்றி பெற்றக் குழுவினர், அடிக்கும் வாய்ப்பு அல்லது உட்காரும் அமைப்பு என்ற ஒன்றைத் தெரிவு செய்வார்கள்.

வெற்றி பெற்றவர், உட்காரும் இடத்தைத் தெரிவு செய்தால், அவர்களது எதிராளிகள் எந்த இடத்தில் அமர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தாங்கள் விரும்புகின்ற இடங்களில் அதாவது பாங்கராகிய கூட்டாளி இருவரும் எதிரெதிரே இருப்பதுபோல அமரவேண்டும். அத்துடன் சுண்டி அடிக்கும் வாய்ப்பு (Strike) எதிராளிக்குக் கிடைக்கிறது.