பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காய்களை
அடுக்கும் முறை


ஆட்டப் பலகையின் (Board) மையத்திலே, 1 அங்குலம் விட்டமுள்ள சிவப்பு வட்டம் ஒன்று போடப்பட்டிருக்கும் அதனுள் சிவப்புக் காய் இருப்பதுபோல முதலில் வைக்க வேண்டும்.

சிவப்புக் காயை மத்தியில் வைத்து, வெள்ளே, கறுப்பு என ஒன்று மாற்றி ஒன்றாகச் சுற்றிலும் அடுக்க வேண்டும். அப்படிச் சுற்றி வைக்கும் பொழுது, முதல் வரிசை வெள்ளை கறுப்பு என்று மாறி மாறி வருவதைக் காணலாம்.

அடுத்த வரிசையை அடுக்கும்பொழுது வெள்ளை காய்கள் கவட்டைக் கொம்புபோல அதாவது ஆங்கில எழுத்து Y போல இருக்கும்படி வெள்ளைக் காய்களை முக்கோணமாக அடுக்க வைக்க வேண்டும்.