பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

ஒகட்டியாகப் பிடித்துக்கொண்டு, பிடிப்பு (Grip) ஏற்படுத்திக் கொள் ளாதவாறு ஆடவேண்டும்.

ஆட்டப் பலகையில் உள்ள எந்தக் காயையும் அடிப் பான சுண்டி அடித்தேதான் நகர்த்திட வேண்டுமே யொழிய, கையால் தொடுவதும் நகர்த்துவதும் தவருகும்.

தண்டனை : அவ்வாறு தவறிழைத்தால் அவரது உரிமைக் காயான ஆட்டக் காய் ஒன்றை வெளியே எடுத்து எதிராளியை ஆட்டப் பலகையில் வைக்குமாறு நடுவர் ஆணையிடுவார். தவறிழைத்தவர் ஒரு காயை இழக்க நேரிடுகிறது.

அடிப்பான் ஆட்டப் பலகையில் எவ்வளவு விரைவாகச் செல்கிறது என்று சோதனை செய்து பார்த்துக் கொள்ள விரும் பில்ை, ஆட்டக் காய்களே அடுக்கி ஆட்டம் தொடங்கு வதற்கு முன்னரே சோதகன செய்து கொள்ளலாம். ஆட்ட நேரத்தில் சோதனை செய்வது தவருகும். தவறுக்கு முன் கூறிய தண்டனையே கிடைக்கும். -

தனது ஆடும் வாய்ப்பில் அடிப்பான வைத்துக் காய்களே அடித்துத் தன் வாய்ப்பு முடிந்ததும், தனது அடிப்பான உடனே ஆட்டப் பலகையைவிட்டு எடுத்துவிட வேண்டும். அதனைத் தன் கையிலோ அல்லது மடிமீதோ வைத்துக் கொள்ளலாம்.

ஆனல், தனக்கு முன்னே உள்ள ஆட்டப் பலகை சட்டத்தின் மேலேயோ அல்லது தனக்கருகேயிருக்கும் பலகைப் பையிலோ (Pocket) வைக்கக்கூடாது. மீறி வைத் தால் தவருகும். தவறுக்கு, முன்னர் கூறியுள்ள தண்டனேயே கிடைக்கும். ---