பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

போடுகிறபோது, அதன் மதிப்பான 5ம், மற்ற காய்களுக்கான வெற்றி எண்களும் கிடைக்கும்.

அவரது மொத்த வெற்றி எண்கள் 24 என்று இருந்து விட்டால், அடுத்து வரும் முறை ஆட்டங்களில், அவர் சிவப்புக்காய் பின்னர் தொடர்காய் போட்டு, தன் காய்களையும் முதலில் போட்டாலும் கூட, சிவப்புக்காயின் மதிப்பான 5 வெற்றி எண்கள் அவருக்குக் கிடைக்காது. எதிராளிக்குரிய உரிமை ஆட்டக் காய்கள் எத்தனே ஆட்டப் பலகையில் மீதி இருக்கின்றனவோ, அத்தனை வெற்றி எண்கள் தான் கிடைக்கும்.

சான்றுக்கு எதிராளியின் காய் 8 தான் மட்டும் இருந்தால், வெற்றி எண் 8 கிடைக்கும். எட்டு வெற்றி எண்கள் கிடைக்காது.

ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற எவ்வளவு வெற்றி எண்கள் எப்படியெல்லாம் பெறுவது என்று தெரிந்து கொண்டோம். இனி ஒரு போட்டி ஆட்டத்தில் (Match) எத்தனை ஆட்டங்கள் ஆடவேண்டும் என்பதனையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

தொடர் போட்டிகளில் (Tournament) நடக்கவிருக்கும் கால் இறுதி போட்டிக்கு முன்னுல் நடக்கும் ஆட்டங்கள் அனைத்திலும் மொத்தம் ஆடவேண்டியவை 8 முறை ஆட்டங்களே (Boards).

அந்த எட்டு முறைஆட்டங்கள் முடிவதற்குள்ளேயே யார் முதலில் 29 வெற்றி எண்களை எடுத் திருக்கின் ருரோ, அவரே ஆட்டத்தில் வெற்றி பெற்றவராகிருர். அல்லது எட்டு முறை ஆட்டங்கள் முடிந்த பிறகு, 22 வெற்றி எண்கள் எடுக்காத நிலையில், அதிக வெற்றி எண்கள் எடுத் திருக்கின்ருரோ, அவரே வெற்றியினைப் பெறுகின் ருர்.