பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டங்களுக்கிடையில்

இடம் மாறி அமரும் முறை (Change of Sides)

ஒற்றையர் ஆட்டமாக இருந்தால், எதிரேதிரே ஆட்டக். காரர்கள் இருப்பார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். முதல் ஆட்டம் முடிந்த பிறகு, ஒருவர் இடத்தில் வந்து ஒருவர் அமர்வதுபோல, எதிரெதிராக உள்ள இடத்தில், இடம் மாற்றிக்கொண்டு உட்கார வேண்டும்.

இரட்டையர் ஆட்டமாக இருந்தால், தனது வலது கைப்புறம் அமர்ந்திருக்கும் எதிராளியின் இருக்கையில் சென்று. ஒருவர் அமர, அவர். அடுத்திருக்கும் வலது கைப்புற எதிராளி ஆசனத்தில் இருக்க, இவ்வாறு ஒரு சுற்று மாற்றம் வருவது போல உட்கார வேணடும்.

ஒற்றையர் ஆட்டத்தில், அல்லது இரட்டையர் ஆட்டத்தில் ஆளுக்கொரு அல்லது குழுவுக்கு ஒரு