பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

இந்த சிவப்புக் காயை அடைவதற்குள் எத்தனே எத்தனை விதிகள் குறுக்கே வந்து நிற்கின்றன என்பதை .நாம் காணுவோம். சிறிது சலனமடைந்தாலும் சிக்கல்களே ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களே சந்திக்க வேண்டிய சூழ் நிலை களும் நமக்கு அதிகம் உண்டு.

சிவப்புக் காயை பைக்குள் இட்டு அதற்குரிய 5 வெற்றி எண்களைப் பெற வேண்டுமானல், சிவப்புக் காயை முதலில் பைக்குள் விழச் செய்து, அதனைத் தொடர்ந்து, அந்த முறை sobt-L-# 35i (Board) தனக்குரியதாக இருக்கும் ஆட்டக் காய்களில் (கறுப்பு அல்லது வெள்ளை) ஒன்றைப் பைக்குள் விழச் செய்தால் தான், அவர் சிவப்புக் காயைப் பெற்றதாகக் கருதப்

இல்லையேல், சிவப்புக் காயை நடுவர் எடுத்து, மைய சிவப்பு வட்டத்தில் வைத்துவிட, ஆடும் வாய்ப்பு அடுத்த

ஆட்டக்காரருக்குப் போய் சேருகிறது. --

தொடர் காயை (Follow coin) போடாதபொழுது, சிவப்புக் காயை எடுத்து வைக்க வேண்டியதுதான் முறையாகும். அந்தப் பொறுப்பு நடுவரைச் சேர்ந்தது. கண்காணிக்கும் பொறுப்பு எதிராட்டக்காரருக்கு உரியது, இவர்கள் இருவரும் தங்கள் கவனக் குறைவில்ை, சிவப்புக் -காயினே ஆட்டப் பலகையினுள் வைப்பதை மறந்துவிட. ஆடும் வாய்ப்பு மாறி, அடுத்தவர் ஆடி ஆட்டம் தொடர்ந்து விட்டால், பிறகு நினைவுக்கு வந்தாலும், மீண்டும் அதனை ஆட்டத்தில் ஆடுவதற்காக எடுத்து வைக்க முடியாது. முன்னர் போட்டிருந்த ஆட்டக்காரருக்கே சிவப்புக் காய் உரிமையாகிறது.