பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

அதேபோல், ஒன்பது காய்களும் பலகையில் இருக்க, சிவப்புக் காயை பைக்குள் இட முயலும் போது, அடிப்பானும் விழுந்துவிட்டால், முன் சொன்னது போலவே, தண்டகனக் காய் வைக்கப்பெறும். அவர் ஆட்ட வாய்ப்பை

இழக்கிருச்.

சிவப்புக் காயும் அதனுடன் தொடர் காயும் பைக்குள் ஒரே அடியில், ஒரே சமயத்தில் விழும் பொழுது, அடிப்பானும் பைக்குள் விழுந்துவிட்டால், சிவப்புக் காயை எடுத்து மைய வட்டத்தில் நடுவர் வைக்க, பைக்குள் விழுந்த உரிமை ஆட்டக்காய், அடிப்பான் பைக்குள் விழுந்ததற்குத் தண்டனையாக ஒரு ஆட்டக்காய், என இரண்டையும் எடுத்து அவரது எதிர் ஆட்டக்காரர் பெரிய மைய வட்டத்தில் வைக்க, மீண்டும் அடித்த அதே ஆட்டக்காரர் ஆடும் வாய்ப்பைப் பெறுகிருர்.

சிவப்புக் காயை முதலில் பைக்குள் போட்டாகி விட்டது. அதற்குத் தொடர் காயாக தன் ஆட்டக் காயைப் போடும் முயற்சியில், தொடர்காயும் அடிப்பானும் பைக்குள் சேர்ந்தாற்போல் விழுந்துவிட்டால், ஒன்று அல்லது ஒன்றுக்கு, மேற்பட்ட காய்கள் விழுந்திருந்தால், அத்தனே காயையும் எடுத்து அடிப்பான் விழுந்த தவறுக்காக இன்னும் ஒரு காயையும் எடுத்து, எதிராட்டக்காரர் பெரிய வட்டத்திற்குள் தான் விரும்புகி ன்ற இ -ல் களி ல் ைவ க்க மீண்டும் அவர் அடித்தாடும் வாய்ப்பைப் பெறுகி ருர்.

மீண்டும் பெறுகிற அந்த வாய்ப்பில், தனது உரிமைக், காய் ஒன்றை பைக்குள் போட்டு விட்டாரென்ருல், அவருக்கு சிவப்புக் காய் உரிமையாகி விடுகிறது.

கேரம்-4