பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ど

எதிராளிக்கு ஏற்றம் கொடுத்து, ஏமாற்றம் அடையச் செய்யும் நிகல கொடுக்கின்ற இறுதிக் காயை எச்சரிக்கையுடன் ஆர்ன் ஆடவேண்டுமென்ருல் கீழ்க்காணும் விதிப் விக்கிகளைப் படித்துவிட்டால், நிச்சயம் நன்கு புரிந்து விடும்;

ஒரு ஆட்டக்காரர் அல்லது ஒரு குழுவினர் 24 வெற்றி எண்களைப் பெற்று விட்டால், சிவப்புக் காயையும் தொடர்காயாக தமது காயையும் போட்டால் கூட. அவருக்கு சிவப்புக் காய்க்கு உரிய 5 வெற்றி எண்கள் கிடைக்காது என்றும், எதிராளியின் ஆட்டக் காய்கள் எத்தனை எஞ்சி இருக்கின்றனவோ, அத்தனை வெற்றி எண்கள் மட்டுமேதான் கிடைக்கும் என்பது உங்களுக்கு முன்னரே தெரிந்த விதிதான்.

இனிவரும் சிக்கலான விதிகளைக் கூறுவோம்.

ஒரு ஆட்டக்காரருக்கு உரிமைக் காய் ஒன்றும், எதிராளிக்கு ஒன்றும், மற்றும் சிவப்புக் காயும் ஆட்டப் பலகையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . ஆடும் வாய்ப்பு பெற்ற அந்த ஆட்டக்காரர், சிவப்புக் காயை முதலில் பைக்குள் போட்டுவிட்டு, தனது ஆட்டக்காயினைத் தொடர்காயாக போட்டுவிட்டால், அவருக்குக் கிடைக்க க் கூடிய மொத்த வெற்றி எண்கள் 6 ஆகும். (24 வெற்றி எண்கள் அவர் ஏற்கனவே பெற்றிருந்தால், 1 வெற்றி எண் மட்டுமே கிடைக்கும்)

முன் நிலையைப்போல காய்கள் இருக்க சிவப்புக் காயை முதலில் போட்டு, தன் கடைசிக் காயைப்போடுவதற்குப் பதிலாக, எதிராளியின் உரிமை ஆட்டக்காயைப் பைக்குள் போட்டுவிட்டால், எதிராளிக்கு 6 வெற்றி எண்கள்