பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 3

கிடைக்கும். (அவரும் 24 வெற்றி எண்கள் பெற்றிருந்தால் அவருக்கு 1 வெற்றி எண்ணே கிடைக்கும்). ... ",

முன் நிலையைப்போலவே, சிவப்புக்காயைப்போட்டு, தன் கடைசிக் காயினைப் போடும் முயற்சியில் எதிராளிக்குரிய கடைசிக் காயினையும் தன் காயையும், சேர்த்து ஒரே அடியில் ஒரே, வாய்ப்பில் ஒன்ருகவே பைக்குள் போட்டு விட்டால்: அடித்துப் போட்டவருக்கு 5 வெற்றி எண்கள் மட்டுமே கிடைக்கும்.

சிவப்புக் காயை அவர் போட்டிருந்தார் என்பதற் காகவே 5 வெற்றி எண்கள் அவருக்குக் கொடுக்கப் படுகிறது. அவருக்கு ஏற்கெனவே 24 வெற்றி எண்கள் இருந்தால், 1 வெற்றி எண் மட்டுமே கிடைக்கும்.

முன் நிலையைப்போலேவே, தனக்கு ஒரு காயும், எதிராளிக்கு ஒரு காயும், சிவப்புக் காய் என மூன்று காய்கள் மட்டும் ஆட்டப் பலகையில் இருக்க, ஆடுகின்ற ஒருவர் தன்காயையும், எதிராளி காயையும் சேர்த்து ஒரே சமயத்தில் பைக்குள் போட்டுவிட, சிவப்புக்காய் மட்டும் ஆட்டப் பலகையில் இருந்தால்-சிவப்புக் காய் போடப் பட்டதாகக் கருதப்பட்டு. அதற்குரிய 5 வெற்றி எண்களும் எதிராட்டக்காரருக்கே கிடைக்கும். ஏற்கெனவே அவருக்கு 24 வெற்றி எண்கள் இருந்தால், 1 வெற்றி எண் மட்டுமே அவருக்குக் கிடைக்கும்.

எதிராளிக்குரிய காய்களும், சிவப்புக்காயும் ஆட்டப் பலகையில் இருக்கும்பொழுது, ஒரு ஆட்டக்காரர் தன்னுடைய ஆட்டக்காய்கள் அனத்தையும் பைக்குள் போட்டு ஆடிவிட்டார் என்ருல், அதற்காக அவருக்கு வெற்றி எண்கள் கிடைக்காது. சிவப்புக் காய் ஆட்டப்