பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

பலகையில் இருந்தாலும் அத்துடன் அந்த முறை ஆட்டம் 'முடிந்துவிடுகிறது.

சிவப்புக்காயை தான் போடாமல் வைத்து விட்டு தன் உரிமைக் காய்களைமட்டும் போட்டதால், அ. த் த சிவப்புக்காய் எதிராளிக்கு உரியதாக ஆக்கப்பட்டு அவருக்கே 5 வெற்றி எண்கள் கொடுக்கப்படும். எதிராளிக்கு ஏற்கனவே 24 வெற்றி எண்கள் இருந்தால், ஒரே ஒரு வெற்றி எண் மட்டுமே கிடைக்கும், -

- சிவப்புக்காய் ஆட்டப் பலகையில் இருக்க, தன் காய்களைப் போடும் முயற்சியில் ஒரு ஆட்டக்காரர் எதிராளியின் கடைசிக் காய் அல்லது காய்களைப் பலகைப் பைக்குள் தெரிந்தோ தெரியாமலோ போட்டு விடுகிருள் என்ருல், அந்த முறை ஆட்டத்தில் அவரது உரிமைக்காய்கள் எத்தனை இருக்கின்றனவோ, அத்தனை வெற்றி எண்களுடன் சிவப்புக் காய்க்கான 5 வெற்றி எண்களும் மொத்தமாக சேர்ந்து எதிராளிக்குக் கிடைத்து விடுகிறது.

தனக்கு ஒரு காய் அல்லது பல காய்களும், எதிராளிக்கு ஒரே ஒரு காயும், சிவப்புக் காயும் ஆட்டப் பலகைமேல் இருக்கும்போது, முதலில் சிவப்புக் காயை பைக்குள் போட்டு அதனேத் தொடர்ந்து தனது தொடர் காயான ஆட்டக் காயைப்போடும் முயற்சியில், எதிராளிக்குரிய ஒரே கடைசிக் காயை தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்ருே "பக்குள் போட்டுவிட்டால், சிவப்புக் காய் போட்ட உரிமை "னது எதிராளிக்கு போய்ச்சேர, அத்துடன் தன்னுடைய Aட்டக்காய்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வெற்றி எண் " சேர்த்து மொத்தமாகக் எதிராளிக்குக் கொடுக்கப்படும்.

ஆட்டத் தொடக்கத்திலோ அல்லது இடையிலோ ஒரு ஆட்டக்காரச் சிவப்புக் காயையும், அதற்குத் துணையாகக்