பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

தொடர் காயையும் போட்டுவிட, பின்னும் ஆட்டம் தொடர்ந்து நடக்க, இருவருக்கும் ஒவ்வொரு ஆட்டக் காய் கடைசிக்காயாக இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம்,

ஒரு ஆட்டக்காரர் தன் கடைசிக் காயைப் பைக்குள் போடும் முயற்சியில், தன் காயுடன் எதிராளி காயையும் சேர்த்துப் பைக்குள் போட்டு விட்டால், அந்த முறை ஆட்டம் (Board) அத்துடன் முடிகிறது. அதனல், சிவப்புக் காயை முதலில் போட்டிருந்தவருக்கு 5 வெற்றி எண்கள் கிடைக்கின்றன.

சிவப்புக்காயைப் போட்டிருந்தவருக்கு ஏற்கனவே 14 வெற்றி எண்கள் இருந்தால், அவருக்கு 5 வெற்றி எண்கள் கிடைக்காது. ஒரே ஒரு வெற்றி எண் மட்டுமே கிடைக்கும்.

  • = எனவே, கண்ணுங் கருத்துடன், கவனமாகவே கடைசிக் காயை ஆடவேண்டும் என்பதை நினைவில் கொண்டு ஆடவேண்டும்.