பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

தண்டனைக் காய்களை பலகையுள் வைக்கும்பொழுது விதியை.

மீறுகின்ற பொழுதும் தவறுகள் நேரும். இனி அவற்றைக் காணலாம்.

அடிப்பா8னப் பயன்படுத்திக் காய்களே அடிக்க முயலும்பொழுது;

தளக்கோடான (Base Lines) இரண்டு கோடுகளிலும் அடிப்பான் இல்லாமல், ஒரு கோட்டில் வைத்து அடிக்கும் பொழுது :

தள வட்டத்தின் (Base circle) முழு வட்டத்திலும் அடிப்பான வைக்காமல், அரை வட்டத்தில் அல்லது கால் வட்டத்தில் வைத்து அடிக்கும் பொழுது:

தள வட்டத்திற்கு அருகில் உள்ள அம்புக் குறிக் கோட்டைத் தொடுமாறு அடிப்பான வைத்து ஆடும்

பொழுது;

அம்புக் குறியைக் கடந்து ஆடப் பயன்படும் கையையோ, அல்லது கால்களையோ கொண்டு செல்லும்

பொழுது,

ஆடும் நேரத்தில், ஆட்டப் பலகையில் உள்ளக் காய்களைத் தொடும்பொழுது, அல்லது நகர்த்தும் பொழுது தவறுகள் நேர்கின்றன.

மேலே கூறிய தவறுகளுக்குத் தண்டனை உண்டு. அதற்காகத் தவறிழைத்தவரின் உரிமை ஆட்டக்காய் ஒன்றை எடுத்து, எதிராட்டக்காரர், ஆட்டப் பலகையின் மைய