பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

பைகளுக்குள் சென்று விழுந்தாலும், அவர் ஒரே அடியில் போட்டிருக்கும் அத்தனைக் காய்களையும் வெளியே எடுத்து ஆட்டப் பலகையினுள் வைப்பதுடன், அடிப்பாகனப் போட்ட தவறுக்காக, ஒரு தண்டனைக் காயையும் எடுத்து மைய வட்டத்தினுள் எதிராட்டக்காரர் வைத்து விடுவார். அதே சமயத்தில், அவருக்கு மீண்டும் ஆட வாய்ப்பு உண்டு.

ஒரு ஆட்டக்காரர் தன் காயைப் போடும் முயற்சியில், எதிராளி காயை பைக்குள் போட்டு, அடிப்பானையும் பைக்குள் விழ அனுமதித்து ஆடியிருந்தால், எதிராளி காயை பைக்குள் போட்டு விட்டதாகக் கருதப்படும். அத்துடன் இவர் அடிப்பான பைக்குள் போட்டத் தவறுக்காகத் தன்-னேக் காய் ஒன்றைத் தர, இவர் மீண்டும் தொடர்ந்து ஆடுகின்ற ஆடும் வாய்ப்பை இழந்து விடுகின்ருர்.

ஒரு ஆட்டக்காரர் தன் ஆடும் வாய்ப்பில் தன் காய் அல்லது காய்கள், எதிராளியின் காய் அல்லது காய்கள் முதலியவற்றைப் பைக்குள் அடித்து விழச் செய்து, அடிப் பானையும் சேர்த்துப் பைக்குள் போட்டு விட்டால்-எதிராளி கயின் காய் அல்லது காய்கள் பையுள் விழுந்ததாகவே ஏற்றுக் கொள்ளப்படும். அத்துடன், பைக்குள் விழுந்த அவரது காய் அல்லது காய்களை எடுத்தும், மற்றும் ஒரு தண்டனைக் காயை .யும் எடுத்து எதிராட்டக்காரர் ஆட்டப் பலகையில் வைக் கிருர். அவருக்குத் தொடர்ந்து ஆடுகின்ற ஆடும் வாய்ப்பு உண்டு.

ஒரு ஆட்டக்காரர் தன் எதிராளியின் காயை விதிகளே மீறிய வழியில் அடித்தாடுவதின் மூலம் பைக்குள் போட்டு