பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O

விட்டால், அந்தக் காய் சரியாகப் போடப்பட்டதாகவே கருதப்படுவதுடன், இவர் தவருக விளையாடியதற்காக தண்டனைக் காய் ஒன்றையும் செலுத்த வேண்டும்.

ஒரு ஆட்டக்காரர் விதிகளை மீறிய வழியாக அடித்தாடு வதன் மூலம், தனக்குரிய உரிமைக் காய்கள் எத்தனை போட்டிருந்தாலும், அத்தனைக் காய்களும் வெளியே எடுக்கப் பட்டு பலகையில் வைக்கப்படுவதுடன், தண்டனைக் காய், ஒன்றையும் செலுத்த வேண்டும். அவர் தனது ஆடும் வாய்ப்பை இழக்கிருர்.

எதிராட்டக்காரர் அவருடைய காய்கள் அனைத்தையும் பைச்குள் போடுவதற்கு முன், சிவப்புக் காய் போட்டிருக்கும் போது தனது காய்கள் அனைத்தையும் எதிர் ஆட்டக்காரர் பைக்குள் போட்டுவிட்டால் அந்த முறை ஆட்டம் முடிவு: பெறும். ஆளுல், அந்த ஆட்டக்காரர்களின் காய்கள் ஆட்டப் பலகையில் இருக்க, எதிராளியின் கடைசிக் காயை தெரிந்தோ அல்லது தெரியாமலோ போட்டு விட்டால், எதிராளியே அந்தக் காயைப் போட்டதாகவே ஏற்றுக் கொள்ளப்படும். -

அத்துடன், அந்த முறை ஆட்டம் (Board) முடிவடைய காயைப் போட்டுத் தந்தவரின் காய் அல்லது காய்கள் எத்தனை இருக்கின்றனவோ, அத்தனை வெற்றி எண்களும் எதிராளிக்குப் போய் சேரும். -

அதுமட்டுமல்ல. எதிராளியின் கடைசிக் காயை அவர் போடுகின்ற சமயத்தில், அடிப்பானையும் சேர்த்து பைக்குள் விழவிட்டால், ஆட்டப் பலகையில் இருக்கும் அவரது காய், களுக்குரிய வெற்றி எண்கள் அத்தனையும் எதிராளிக்குங்