பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

கிடைப்பதுடன், அடிப்பான தவற விட்டத் தவறுக்காக தண்ட8னக் காய் ஒன்றை வைப்பது போல, அதிகமான இன்னும் ஒரு வெற்றி எண்ணையும் சேர்த்துத் தர வேண்டும்.

(அந்த ஒரு வெற்றி எண்ணே, எதிராளி வேண்டுமென்று விரும்பினல் அல்லது கேட்டால் அவருக்கு நடுவர் அளிப்பார்.)

ஆட்டம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில்,விரும்பியோ, வேண்டுமென்ருே அல்லது அவரை அறியாமலோ ஆட்டப் பலகையின் மீது கைகளை வைக்கவே கூடாது. மீறி ஆட்டப் பலகையைத் தவறுதலாகத் தட்டியோ, தள்ளியோ, தாக்கியோ, வைத்திருக்கும் காய்கள் நகர்ந்து போகவும். சரிந்து விடவும், சிந்திப் போகவும் செய்தால், மீண்டும் காய்களே அந்தந்த இடங்களில் வைப்பது எளிதான காரியம் அல்ல என்பதால் அந்த ஆட்டக்காரருக்குத் தரும் தண்டனை சற்று கடுமையாகவேதான் இருக்கும்.

அதன்படி, அந்த ஆட்டப் பலகையில் எத்தனைக் காய்கள் இருந்தனவோ, சிவப்புக் காய் இருந்தாலும் அதற்கும் சேர்த்து, மொத்தமாக வெற்றி எண்கள் அனைத்தை கயும் எதிராட்டக்காரருக்கு நடுவர் தந்து விடுவார் .

ஆகவே தண்டனை என்பது, தண்டனைக்காய் எடுத்து வைப்பது, ஆடும் வாய்ப்பை இழப்பது அல்லது அந்த முறை ஆட்டத்தையே இழந்து, இருக்கும் காய்களுக்குரிய வெற்றி எண்களை எதிராட்டக்காரருக்குக் கொடுப்பது என்ற வாறு:

கண்டனைகள் தரப்படுகின்றன.