பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63.2

தவறுகள் நேரா வண்ணம் ஆடுவது ஒரு ஆட்டக் காரரின் தனிச் சிறப்பாகும். லாகவமாக்க் காய்களைப் பைக்குள் போடும் திறன் மட்டும் ஒரு ஆட்டக்காரருக்கு நல்ல வெற்றியையும், சிறந்த புகழையும் தத்துவிடாது.

ஆகவே, பதட்டப்படாமல், அமைதியை இழக்காமல், திறமையை வளர்க்கும் நிதானத்துடன் செயல்படுகின்ற ஆட்டக்காரசே, ஆட்டத்தில் பயன் பெற முடியும்.

தவறின எல்லா ஆட்டக்காரர்களும் செய்து விடுவதால் தண்டனைக் காய் வைக்கும் பணிதான் அடுத்தடுத்து வரும். ஆகவே, தனக்குவரும் தண்டனைக்காயையும் விதிகளை மீருமல், தகுந்த முறையில் வைக்க வேண்டியது ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் இன்றியமையாத திறன் நுணுக்கமாகும்.

எனவே, இனிவரும் பகுதியில், தண்டனைக்காயைச் அல்லது காய்களை எவ்வாறு ஆட்டப் பலகையில் வைப்பது என்ற முறையை தெரிந்து கொள்வோம்.