பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

ஒன்றுக்கு மேல் தண்டனைக் காய்கள் எடுத்து வைக்கப் படவேண்டிய சூழ்நிலை எழும்போது, காய்கள் இருந்தால் எடுத்து வைக்கலாம் ஒரு காய் மட்டுமே அவரால் போடப் பட்டிருந்தால், அங்கு இருக்கும் ஒரு காயையும் எடுத்து வைக்கச் செய்த பின்னர், அவர் போடவிருக்கும் அடுத்தக் காய்க்காகக் காத்திருக்க வேண்டும். மறு காயை அவர் போட்ட பிறகு. அவரின் அடுத்த ஆடும் வாய்ப்புத் தொடங்கு வதற்குள் எடுத்து வைத்துவிட வேண்டும். * --

இனி, தண்டனைக்காயினை வைக்கும் முறையினைக் கவனிப்போம்,

==

தண்டனைக் காயை வைக்கும் உரிமை பெற்ற ஒரு ஆட்டக்காரர், தண்டனைக் காயை எடுத்து உள் வட்டத் AffsbS) (Inner Circle) GG விரலால் அல்லது விரல்களால்

தள்ளிக்கொண்டு வந்தவுடன், தான் விரும்புகிற ஓரிடத்தில் வைத்து விடவேண்டும்.

அதற்கென்று ஒரு சில முறைகள் உண்டு. ஒரு முறை விரல்களால் தள்ளிக் காயை வைத்து, காயிலிருந்து விரல்களே எடுத்து விட்டால், மீண்டும் காயின்மேல் உள்ள விரல அல்லது விரல்களை வைத்து, தான் விரும்புகிற மற்ருெரு இடத்தில் கொண்டுபோய் நகர்த்தி வைக்க முடியாது.

உள் வட்டத்திற்குள் அடங்கித்தான் காயை வைக்க வேண்டும்.

ஒரு முறை பெரிய சிவப்பு வட்டத்திற்குள் காயைக் கொண்டுபோய் விட்டால், மீண்டும் வேறு யோசனை வரும்

கேரம்-5