பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பொழுது வட்டத்திற்கு வெளியே கொண்டு வந்து மறுபடியும் மறுபுறத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. வட்டத்திற்குள் காயைக் கொண்டு போய் விட்டால் அங்கேயோ எங்கே யாவது தான் விரும்பிய இடத்தில்தான் கையை வைக்கலாம். அதையும் 20 விகுடிகளுக்குள் வ்ைக்க வேண்டும்.

| டன் வட்டத்தைக் காட்டும் சிவப்புக் கோட்டுக்கு வெளியே தண்டனைக்காய் வைக்கப்பட்டிருந்தால். அதனை எடுத்து உள்வட்டத்திற்குள்ளே வைக்குமாறு நடுவர் ஆணையிடுவார். அத்துடன் அவர் தவருக தண்டனைக்காய் வைத்ததற்குத் தண்டனை தருவது போல, எதிராளியை ஒரு காயை எடுத்து அவருக்கு எதிராக வைக்குமாறு ஆணையிட, *ண்டும் ஆட்டம் வழக்கம் போல தொடரும்.

அத்துடன் தண்டனைக்காயை வைக்கும்பொழுது, ஆட்டப் பலகையில் உள்ள மற்றக் காய்களின் மீது படும்படி யாக வைத்தாலும், அல்லது விரலால் தொட்டாலும் நகர்த் திகுலும், அது தவருகும். அதற்குத் தண்டனையாக அவரது க்ாயை எடுத்து அவரது எதிராட்டக்காரர் தண்டனைக்காய் வைத்துவிட, மீண்டும் ஆட்டம் வழக்கம்போல் தொடரும்.

நகர்த்தப்பட்டக் காயின் பழைய இடத்தை முடிந்தவரை அறிந்து, அந்த இடத்தில் அந்தக் காயை நடுவர் வைப்பார், இதல்ை, அவரது ஆடும் வாய்ப்பு பாதிக்கப்படாது. முறை யாக ஆட்டத்தைத் தொடரலாம்.

'உன் தவறுக்கும் என் தவறுக்கும் சரியாகிவிடாது" என்று தவற்றை நேர் செய்துகொள்வது இங்கு முடியாது