பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக்காரர்களுக்கு சில குறிப்புக்கள்

போட்டி ஆட்டத்தை நடத்துவதற்கென்று, ஒரு ஆட்டப் பலகையைத் (Board) தேர்ந்தெடுத்து நிர்ணயித்து, அதற்குரிய "தாங்கி'யில் அமர்த்தச் செய்து, ஆட்டத்தை ஆடத் தொடங்கி விட்டால், ஆட்ட நடுவில் அதனை எக்காரணத்தை முன்னிட்டும் நகர்த்தவோ, பக்கங்களை மாற்றவோ கூடாது. -

ஒவ்வொருவர் விருப்பத்திற்காகவும் மாற்ற முடியாது என்ருலும், யாரேனும் ஆட்டப் பலகையின் தரம் பற்றிச் சுட்டிக் காட்டினல், அந்த முறையீட்டை நடுவர் ஏற்றுக்கொண்டு, பரிசோதித்து, நன்கு நிலையை பரிசீலித்த பின்னர், அந்த ஆட்டப் பலகை ஆட்டத்திற்கு ஏற்ற நிலையில் அமைந்திருக்கவில்லை என்று நடுவர் தீர்மானித்தால்தான்